சிறைச்சாலை வன்கலவி
சிறைச்சாலை வன்கலவி (Prison rape) அல்லது சிறையில் வன்கலவி (jail rape) என்பது சிறைச்சாலையில் நிகழும் வன்கலவிகளைக் குறிப்பதாகும்.கைதிகள் மற்ற கைதிகளால் பாலியல் வன்கலவி செய்யப்படுவதை விவரிக்க இந்த சொற்றொடர் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, கைதிகள் கைதிகளால் பாலியல் வன்கலவி செய்யப்படுவது, மற்றும் கைதிகள் பணியாளர்களை வன்கலவி செய்வது அரிதாவே நடைபெறுகிறது மற்றும் பணியாளர்களால் கைதிகள் வன்கலவி செய்யப்படுவது ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
அமெரிக்க சிறைச்சாலைகளில், பெரும்பான்மையான சிறை வன்கலவி வழக்குகளில் ஆண்கள் மற்ற ஆண்களால் பாலியல் வன்கலவி செய்யப்படுகின்றனர். [1]
சில அதிகார வரம்புகளில், சம்மதத்தைப் பொருட்படுத்தாமல், சிறை ஊழியர்களால் நடைபெறும் பாலியல் தொடர்பு சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது. [2]
சீனா
தொகுபிப்ரவரி 2021 இல், பிசிசி நியூஸ் சிஞ்சியாங் தடுப்பு முகாம்களில் உய்குர் பெண்களை வன்கலவி செய்ததாக நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கை அறிவித்தது. [3] [4]
ஜின்ஜியாங் மறு கல்வி முகாம்களில் முன்பு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல பெண்கள் வன்கலவி உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்துள்ளனர். [3] முகாம்களில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட சாயரகுல் சாயிட்பே என்ற ஆசிரியர் பிபிசியிடம் , அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த மறு கல்வி முகாமின் ஊழியர்கள் அனைவரும் பாலியல் வன்கலவி செய்தனர், முகாம் காவலர்கள் "அவர்கள் விரும்பும் பெண்கள் மற்றும் இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்றனர்" என்று கூறினார் " [3] பிபிசியிடம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பாலியல் வன்கலவியில் ஈடுபடுவதாக அவர் கூறினார், அதில் 21 வயதிற்குட்பட்ட ஒரு பெண், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100 பெண்களின் கூட்டத்தின் முன் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார், கூடியிருந்த கூட்டத்தின் முன்னால் பல காவல் துறையினரால் பாலியல் வன்கலவி செய்யப்பட்டார்.[3] ஒன்பது மாத காலத்திற்கு மறு கல்வி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துர்சுனே ஜியாவுதுன் என்ற பெண், பிபிசியிடம், "ஒவ்வொரு இரவும்" சீன ஆண்களால் பாலியல் வன்கலவி செய்யப்படுவதாக கூறினார். தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குழு பாலியல் வன்கலவி நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் கூறினார். [3] ஜின்ஜியாங்கைச் சேர்ந்த உஸ்பெக் பெண் கேல்பினூர் செடிக், மின்சார அதிர்ச்சி சித்திரவதையின் போது கைதிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறினார், " ... நாற்காலி, கையுறை, தலைக்கவசம் மற்றும் குச்சியால் பாலியல் வன்கலவி (அனல்)[தெளிவுபடுத்துக] போன்ற நான்கு வகையான மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படதாக கூறினார்". [3]
ஈரான்
தொகுஈரானில் அரசியல் கைதிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகமாக உள்ளது. [5] இது அதிகாரிகள் கவலை கொள்வது இல்லை அல்லது ஊக்கப்படுத்தப்படுத்துவதாக அமைகிறது. [6]
ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள், பல பத்தாண்டுகளாக ஈரானில் விசாரணையாளர்களால் வன்கலவி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. [7] 1980 களில், ஈரானிய இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து, பெண் அரசியல் கைதிகள் மீதான பாலியல் வன்கலவி மிகவும் அதிகமாக இருந்தது, இது உச்ச தலைவர் அயதுல்லா கொமெய்னியின் அப்போதைய துணைத்தலைவர் உசைன்-அலி மொன்டாசரியை பின்வருமாறு கொமெய்னிக்கு 7 அக்டோபர் 1986 இல் ஒரு கடிதத்தில் எழுதத் தூண்டியது: "இஸ்லாமிய குடியரசின் சில சிறைகளில் இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?" [8] ஈரானின் மனித உரிமைகள் சமூகத்தின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள், பெண்ணிய வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஷாதி சதர் மற்றும் ஆர்வலர் மொஜ்தாபா சமினேஜாட் ஆகியோர் இஸ்லாமிய குடியரசில் சிறை வன்கலவி நீண்டகாலமாக நடந்துவருவதாக கூறி ஈரானில் இருந்து இணையத்தள கட்டுரைகளை வெளியிட்டனர். [8]
சான்றுகள்
தொகு- ↑ Stemple, Lara; Meyer, Ilan H. (June 2014). "The Sexual Victimization of Men in America: New Data Challenge Old Assumptions". American Journal of Public Health 104 (6): e24. doi:10.2105/AJPH.2014.301946. பப்மெட்:24825225.
- ↑ Santi, Alysia. "Preying on Prisoners: When Texas Guards Demand Sex பரணிடப்பட்டது 2018-01-29 at the வந்தவழி இயந்திரம்". The Texas Tribune. Published 17 June 2015. Retrieved 29 January 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Hill, Matthew (2 February 2021). "'Their goal is to destroy everyone': Uighur camp detainees allege systematic rape" (in en-GB). BBC News. https://www.bbc.co.uk/news/world-asia-china-55794071.
- ↑ Brunnstrom, David (4 February 2021). "U.S. 'deeply disturbed' by reports of systematic rape of Muslims in China camps" (in en). Reuters. https://www.reuters.com/article/us-china-xinjiang-usa-idUSKBN2A338W.
- ↑ Ehsan Zarrokh (Ehsan and Gaeini, M. Rahman). "Iranian Legal System and Human Rights Protection" The Islamic Law and Law of the Muslim World e-journal, New York law school 3.2 (2009).
- ↑ Dehghan, Saeed Kamali. "Iran giving out condoms for criminals to rape us, say jailed activists பரணிடப்பட்டது 2019-02-05 at the வந்தவழி இயந்திரம்". Published 24 June 2011. Retrieved 27 January 2018.
- ↑ "New Prison-Rape Allegations In Iran Bring Practice To Light". Radio Free Europe / Radio Liberty. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015.
- ↑ 8.0 8.1 Mackey, Robert (28 August 2009). "Iranians Say Prison Rape Is Not New". The Lede. Archived from the original on 14 June 2018. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.