சிற்றிலக்கிய வகை

பிரபந்தத் திரட்டு பிரபந்த தீபம், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல் என்னும் இலக்கண நூல்களில் பலவகையான 200-இக்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல நூல்களுக்கு இலக்கியங்கள் இக்காலத்தில் காணப்படவில்லை. இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கியங்கள் தொகுக்கப்பட்டுப் பொருள்நோக்குப் பாகுபாடு செய்யப்பட்டு அகரவரிசைப்படுத்தி இங்குத் தரப்பட்டுள்ளன. விளக்கம் அவற்றைச் சொடுக்கிக் காணலாம்.

எண் குறிப்பு

எண்கள் நூலிலுள்ள பாடல் எண்ணைக் குறிப்பன.

தனி எண் (பிரபந்தத் திரட்டு)
(-) (பிரபந்த தீபம்)
((-)) (பிரபந்த தீபிகை)
(((-))) (பிரபந்த மரபியல்)

பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்றவை

தொகு

10 பாடல்கள் கொண்ட நூலைப் பழங்காலத்தில் 'பத்து' என்றே பெயரிட்டு வழங்கினர். பிற்காலத்தில் 'பதிகம்' என்று இதனை வழங்கினர். பதிற்றுப்பத்து நூலிலுள்ள 10 பாடல்களுக்குத் 'தொகுப்புரை' அமைந்துள்ள பாடலைப் 'பதிகம்' என்கிறோம். இந்தச் சொல் வேறு. 10 பாடல்கள் கொண்ட 'பதிகம்' என்னும் நூலைக் குறிக்கும் சொல் வேறு.இன்னா நாற்பது போன்ற நூலகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

ஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய நூல் பெயர்கள் 'நூறு' என்னும் சொல்லாலேயே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் 'சதகம்' என்னும் வடசொல் 100 பாடல்களைக் குறிக்கப் பயன்படுத்தினர்.

  1. 10 நயனப்பத்து 22, (((15))), (70), ((23)),
  2. 10 இருபா இருபஃது (10), ((21)), (((15)))
  3. 10 ஒருபா ஒருபஃது (59), ((21)), (((23)))
  4. 10 முலைப்பத்து 22, (((15)))
  5. 10 பயோதரப்பத்து (71), ((23)),
  1. 10 தசப்பிராதுற்பவம் 21, (((37)))
  2. 10 தசாங்கத்தயல் (69), ((24)),
  3. 10 தசாங்கப்பத்து (68), ((25)), (((16)))
  4. 10 தசாங்க வன்னிப்பு 9
  5. 10 பதிகம் (80), ((26)),
  1. 100 சதகம் (81), ((26)),
  2. 40 நாற்பது (77)
  3. எண்செய்யுள் (21), ((15)),

பாடல் வகையால் பெயர் பெற்றவை

தொகு

வெண்பா, விருத்தம் என்பவை பாடலைக் குறிக்கும் பெயர்கள். இவற்றில் ஒரு பெயரை இணைத்துக்கொண்டு பெயர் பெறும் நூல்கள் பல. கலம்பகம் நூலில் பலவகையான பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

  1. பா, அலங்காரபஞ்சகம் 16, (6), ((24)),
  2. பா, ஊர் இன்னிசை (16), ((22)),
  3. பா, ஊர் நேரிசை (18)
  4. பா, ஊர் வெண்பா (17), ((23)),
  5. பா, எழுகூற்றிருக்கை (20), ((30)),
  6. பா, கடிகை வெண்பா (86), ((30)),
  7. பா, தாண்டகம் (79) , ((26)),
  1. பா, திருக்குறுந்தொகை
  2. பா, திருநேரிசை
  3. பா, நாழிகை வெண்பா (((38)))
  4. பா, பெயர் நேரிசை (63)
  5. பா, பெயரின்னிசை (62), ((22)),
  6. பா, மங்கல வெள்ளை ((26)),
  7. வஞ்சிப்பா, வரலாற்று வஞ்சி (44), ((15)), (((39)))
  1. விருத்தம், அரசன் விருத்தம் ((24)), (5), ((31)),
  2. விருத்தம், ஊர் விருத்தம் (((17)))
  3. விருத்தம், குடை விருத்தம் (((17)))
  4. விருத்தம், கோல் விருத்தம் (((17)))
  5. விருத்தம், சிலை விருத்தம் (((17)))
  6. விருத்தம், நாடு விருத்தம் (((17)))
  7. விருத்தம், பரி விருத்தம் (((17)))
  8. விருத்தம், யானை விருத்தம் (((17)))
  9. விருத்தம், வாள் விருத்தம் (((17)))
  10. விருத்தம், வேல் விருத்தம் (((17)))

திணை வகையால் பெயர் பெற்றவை

தொகு

பொருள் கோட்பாட்டுத் திணைகளைத் தொல்காப்பியர் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பாகுபடுத்திக் கண்டார். பிற்காலத்தவர் அகத்திணை 5 என்றும், புறத்திணை 12 என்றும் மாற்றி அமைத்துக்கொண்டனர். இவை அனைத்துமே இலக்கண நூலார் செய்துகொண்ட பாகுபாடுகள். இந்தத் திணைநிலைகளை மையமாகக் கொண்டு அமைந்த தனித்தனிச் சிற்றிலக்கியங்களே இவை.

  1. உழிஞை மாலை ((17)), (((35))), (13)
  2. ஐந்திணைச் செய்யுள் ((8)), (22)
  3. கரந்தை மாலை (((35)))
  4. காஞ்சி மாலை (((35))), (46), ((16)),
  5. காஞ்சி, முதுகாஞ்சி (89), ((30)),
  6. கைக்கிளை ((20)) , (((29)))
  7. தும்பை மாலை (48), ((17)), (((35)))
  8. நொச்சி மாலை (47), ((16)), (((35)))
  1. வஞ்சி மாலை ((15)), (((35)))
  2. வஞ்சி, செருக்கள வஞ்சி (45), ((16)), (((39)))
  3. வஞ்சி, போர்க்கெழு வஞ்சி (57), ((15)),
  4. வஞ்சி, முரண்வஞ்சி 29
  5. வஞ்சி, மெய்க்கீர்த்தி வஞ்சி (((28)))
  6. வாகை மாலை (49), ((17)), (((35)))
  7. வெட்சி மாலை (42), ((14)), (((35)))
  8. வெட்சிக்கரந்தை மஞ்சரி (43), ((15)),

தொடை வகையால் பெயர் பெற்றவை

தொகு
  1. அந்தாதி 7
  2. அந்தாதி, ஒலி அந்தாதி 75, (56), (18), (((14)))
  3. அந்தாதி, கலித்துறை அந்தாதி (((8)))
  4. அந்தாதி, நூற்றந்தாதி (55), ((19)),
  5. அந்தாதி, பதிற்றந்தாதி (54), ((19))
  6. அந்தாதி, மருப்பொருளியல் அந்தாதி 94, 95
  7. அந்தாதி, வெண்பா அந்தாதி (((8)))
  8. அலங்க்கார பஞ்சகம் (((21)))
  9. அலங்காரம், பொய்ம்மொழிஅலங்காரம் 17
  10. அலங்காரம், மெய்ம்மொழிஅலங்காரம் 17
  11. கோசம், அண்டகோசம் 44
  12. கோவை 42, 106
  13. கோவை, அகப்பொருள் கோவை ((8)), (((10)))
  14. கோவை, மும்மணிக்கோவை (24) (((13)))
  15. கோவை, மும்மணிக்கோவை 7, ((7)),
  16. கோவை, வருக்கக்கோவை (23), ((7)), (((9)))
  17. மாலை (((34)))
  18. மாலை, அங்கமாலை (2), 23, ((9)), (((26)))
  19. மாலை, அநுராகமாலை (4), ((9)), (((33)))
  20. மாலை, ஆதோரணமஞ்சரி ((17)),
  21. மாலை, ஆனைத்தொழில் (((39)))
  22. மாலை, இணைமணிமாலை (((12)))
  23. மாலை, இரட்டைமணிமாலை (8), 12, ((10), (((11)))
  24. மாலை, இனமணிமாலை (9), ((10)),
  25. மாலை, உற்பவமாலை (12), ((13)),
  26. மாலை, ஒன்பான் மணிமாலை 21
  27. மாலை, காப்புமாலை (35), ((13)),
  1. மாலை, காமரசமாலை 43
  2. மாலை, குலோதயமாலை 9
  3. மாலை, கூடன்மாலை
  4. மாலை, கேசாதிபாத மாலை 23, (73), ((24)), (((26)))
  5. மாலை, சின்ன மாலை 28
  6. மாலை, தாண்டகமாலை (41), ((14)),
  7. மாலை, தாரகைமாலை (38), ((13)), (((36)))
  8. மாலை, தானைமாலை (39), ((14)), (((35)))
  9. மாலை, தோரணமஞ்சரி (50)
  10. மாலை, நட்சத்திரமாலை 27
  11. மாலை, நவமணிமாலை (25), ((11)), (((23)))
  12. மாலை, நாமமாலை (27), ((11)), (((29)))
  13. மாலை, நான்மணிமாலை (26), 11, ((11)), (((20)))
  14. மாலை, பருவமாலை 11, 108
  15. மாலை, பல்சந்தமாலை (28), 6, ((11)), (((24))),
  16. மாலை, பன்மணிமாலை (29), 15, ((12)),
  17. மாலை, பாதாதிகேசமாலை 23, (72), ((24)), (((26)))
  18. மாலை, புகழ்ச்சிமாலை (31), ((12)), (((29)))
  19. மாலை, பெருமகிழ்ச்சிமாலை (32), ((12),
  20. மாலை, மஞ்சரி 35 – 39, 98 – 100, (((34)))
  21. மாலை, மணிமாலை (30), ((12)),
  22. மாலை, மும்மணிமாலை 8, (40), ((14)), (((20)))
  23. மாலை, மெய்க்கீர்த்திமாலை (34), ((13)),
  24. மாலை, ராசாங்கமாலை 20
  25. மாலை, வசந்தமாலை (37), ((13)),
  26. மாலை, வருக்க மாலை 28, ((12), (((19)))
  27. மாலை, வருக்கமாலை (33)
  28. மாலை, வாடாதமாலை 26, 97
  29. மாலை, வேனில்மாலை (36), ((13)),

வாழ்த்து

தொகு
  1. இயன்மொழி வாழ்த்து (11), ((31)),
  2. செவியறிவுறூஉ (85), ((27)),
  1. புறநிலை வாழ்த்து (83), ((27)),
  2. வாயுறை வாழ்த்து (84), ((27)),
  1. உலா (15), 31, 108, ((19)), (((31)))
  2. உலா, பவனிக்காதல் (82)
  3. உலா, இலட்சுமி விலாசம் 8
  1. உலா, வதன சந்திரோதயம் 72
  2. உலாமடல் (((32)))

நிலை பாடல்கள்

தொகு
  1. நிலை, கடைநிலை (66), ((25)),
  2. நிலை, கண்படைநிலை (60), ((22)),
  3. நிலை, கையறுநிலை (67), ((25)),
  1. நிலை, துயிலெடைநிலை (61), ((22)),
  2. நிலை, புறநிலை (65), ((21)),
  3. நிலை, விளக்குநிலை (64), ((23)),
  1. அங்கி, சகத்திராங்கி 44
  2. அங்கி, வச்சிராங்கி 43
  3. ஆற்றுப்படை (7), 27, ((21)), (((25)))
  4. இரட்டைநாக பந்தம் ((39)),
  1. உத்தியாபனம், காதலுத்தியாபனம் 47
  2. ஊசல் (19), (((18))) ஊஞ்சல் ((30)), மணியூசல் 20
  3. கலம்பகம் (95), 32, 33, 34, 107, ((7)), (((5, 6)))
  4. கலியான சுந்தரம் 49
  1. கனகாபிடேகம் 26
  2. கனவுகண்ணி 74
  3. காப்பியம் (91), 76
  4. கையுறை, தெய்வக்கையுறை 17
  1. சடானனம் 14, 109
  2. சந்திரோதயம், விடய சந்திரோதயம் 51
  3. சம்பிரதாயம், வசனசம்பிரதாயம் 69
  4. சமசங்கிராமம் 67
  5. சமுத்தி (97)
  6. சாதகம் (93), 2, ((5)), (((34)))
  1. சிங்காரம், தடாக சிங்காரம் 13, 97
  2. சிங்காரம், தனசிங்காரம் 51
  3. சிங்காரம், மதன சிங்காரம் 102, 48
  4. சித்திரக்கவிப் பாட்டு 55 – 65
  5. சிந்தாமணி 49
  6. சிந்து மோகினி 45, 46
  7. சிந்து, குறியறி சிந்து 18, 109
  1. சிலேடா சாகரம் 52
  2. சிறை, தேவாங்க வரையுள் 73
  3. சின்னப்பூ (87), 15, ((31)), (((16)))
  4. சீட்டுக்கவி (96)
  5. சுயமவரம் 66
  6. செயம், சித்திர உபாய செயம் 50
  1. தமிழ்சொரி 49
  2. தவம், மானதவம் 53
  3. தாமரை நோன்பு 25
  4. திருப்பெயர்ப்பொறி 73
  1. தூது (76), 30, ((26)), (((33)))
  2. தொகை, குறுந்தொகை (52)
  3. தொகை, நெடுந்தொகை (51)
  4. தொகைச்செய்யுள் ((18)),
  1. தொழில், உழத்திப்பாட்டு ((29)),
  2. தொழில், குறத்தி பாட்டு (92), குறவஞ்சி ((28)),
  3. நொண்டி 14
  4. நோன்பு, தாமரை நோன்பு 96
  1. பட்டாபிடேகம் 101,74
  2. பரணி 45, ((6)), (((40)))
  3. பால், குழமகன் (78), ((26)),
  4. பால், திணை, கைக்கிளை (74)
  5. பிரிவுகரம் 67
  6. பிள்ளைக்கவி (94), ((5)), (((2, 3)))
  7. பிள்ளைத்தமிழ் 3, 4, 5, 105
  1. புறநாட்டுச் செய்கை 24
  2. பெருமங்கலம் (90)
  3. மங்கலம், அட்டமங்கலம் (3), ((9)), (((22)))
  4. மங்கலவள்ளை (75), (((27)))
  5. மடல் 22, 108,
  6. மடல், இன்பமடல் (((31)))
  7. மடல், உலாமடல் (14), ((20)),
  8. மடல், வளமடல் (58), ((20)),
  1. மணி, ஆடாமணி 10, 106
  2. மணி, இணைமணி 12
  3. மதனவிசையம் 42
  4. மயக்கம், கன்னிமயக்கம் 68, 104
  5. மாதிரக்கட்டு 40, 41
  6. மாற்று, கதைமொழிமாற்று 69
  1. வகுப்பு, வெருவகுப்பு ((13))
  2. வண்ணம் ((32)),
  3. விசித்திரம், துனி விசித்திரம் 6
  4. விசித்திரம், பண்ணை விசித்திரம் 19
  1. விசேடம், தருமவிசேடம் 50
  2. விசேடம், நதிவிசேடம் 71
  3. வித்தாரம், விசயவித்தாரம் 53
  4. விருத்தம் (88), 16
  1. விலாசம், கற்பனை விலாசம் 70
  2. வினோதம், வேடர் வினோதம் 68
  3. வேட்டம், கானவேட்டம் 54, 103

அடிக்குறிப்பு

தொகு
  1. வெட்சி நிரைகொளல்
    தவிர்த்தல் கரந்தை
    மாற்றார்பால் செல்லல் வஞ்சி
    ஊன்றல் காஞ்சி
    மதிலைக் காத்தல் நொச்சி
    கற்றல் உழிஞை
    தும்பை பொருதல்
    வென்று மிகுபுகழ் விளைத்தல் வாகை
    தானையை விரித்தல் தானை மாலை
    இவை ஒன்பதும்
    எப்பாட்டானும் முப்பஃது இயம்பின்
    அப்பெயர் வருக்கத்து அவ்வம் மாலை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றிலக்கிய_வகை&oldid=3212245" இலிருந்து மீள்விக்கப்பட்டது