சிலிகுரி

சிலிகுரி (Siliguri) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களின் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் சிலிகுரி தேயிலை (Tea), மரம் (Tree) மற்றும் சுற்றுலா (Travel) ஆகிய மூன்று T க்கு பிரபலமானது.[3] இது இமயமலையின் அடிவாரத்தில் மகானந்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [4] இது, கொல்கத்தா மற்றும் ஆசான்சோலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மூன்றாவது பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஆகும்.

சிலிகுரி
শিলিগুড়ি / सिलीगुड़ी
நகரம் / நகர ஒருங்கிணைப்பு
Siliguri view.jpg
அடைபெயர்(கள்): வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்டார்ஜிலிங் மாவட்டம், ஜல்பைகுரி மாவட்டம்
பெயர்ச்சூட்டுவடக்கு மேற்குவங்காளத்தின் பெரியநகரம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சிலிகுரி மாநகராட்சி
பரப்பளவு
 • நகரம் / நகர ஒருங்கிணைப்பு48 km2 (19 sq mi)
உயர் புள்ளி644 m (2,113 ft)
தாழ் புள்ளி122 m (400 ft)
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[1]
 • நகரம் / நகர ஒருங்கிணைப்பு509,709
 • அடர்த்தி11,000/km2 (28,000/sq mi)
 • பெருநகர்[2]1,201,489
இனங்கள்சில்குரியன்கள், சில்குரிபாசு
மொழிகள்
 • அலுவல்பெங்காலி, ஆங்கிலம், நேபாளி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அகுஎ734 001-734 015
தொலைபேசி குறியீடு+91353
மக்களவைத் தொகுதிசிலிகுரி
சட்டமன்றத் தொகுதிசிலிகுரி, தாப்கிராம்-பூபாரி
இணையதளம்www.siligurismc.com

மேற்கு வங்காளத்தின் முக்கிய வணிக மையமாக விளங்குகிறது. இது நான்கு சர்வதேச எல்லைகளை இணைக்கும் வசதியாக அமைந்துள்ளது சீனா, நேபாளம், பூடான் மற்றும் வங்காள தேசம், பூட்டான் ஆகியவற்றிற்கு வான்வழி, சாலை மற்றும் தொடர்வண்டி போக்குவரத்துக்கான சந்திப்பாகவும் விளங்குகிறது. இது வடகிழக்கை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கிறது. மேலும், மேற்கு வங்கத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிலிகுரி ஒரு வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகும். காலப்போக்கில், சிலிகுரி ஒரு கிராமத்திலிருந்து வணிக மையமாக வளர்ந்துள்ளது

சிலிகுரி டார்ஜிலிங் மாவட்டத்தின் மிகப்பெரும் நகரமாக உள்ளது. சிலிகுரியின் தனித்துவமாக நகரின் 47 வார்டுகளில் 15 அண்மையிலுள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகருக்கான வானூர்தி நிலையம் பக்டோக்ரா வானூர்தி நிலையமாகும்.

காலநிலைதொகு

கோப்பன் காலநிலை வகைப்பாட்டைப் பயன்படுத்தும் போது சிலிகுரி ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலைக்கு கீழ் வருகிறது. வெப்பமான கோடையும், குளிர்ந்த குளிர்காலமும், கடுமையான பருவமழையும் சிலிகுரியின் காலநிலையை வரையறுக்கிறது.

புள்ளி விவரங்கள்தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், சிலிகுரி யுஏ / பெருநகரத்தின் மக்கள் தொகை 701,489 ஆகவும், நகராட்சி பகுதியில் மக்கள் தொகை 2,94,546 ஆகவும் உள்ளது.[5] மக்கள் தொகையில் 51.44% ஆண்களும், பெண்கள் 48.55% பேரும் உள்ளனர். சிலிகுரி நகராட்சி பகுதியில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகை பங்குகள் முறையே 8.84% மற்றும் 1.25% ஆகும். சிலிகுரியில் கல்வியறிவு விகிதம் 77.64% ஆகும்.[5][2] சிலிகுரியில் 154 அறிவிக்கப்பட்ட மற்றும் 31 அறிவிக்கப்படாத சேரிகளும் உள்ளன. சிலிகுரியின் மக்கள் தொகையில் 32% இங்கு தங்கியுள்ளனர்.

மொழிகள்தொகு 

மேற்கு வங்கத்தில் சிலிகுரியின் மொழியியல் குழுக்கள் (2011)[6]

  பெங்காலி (அலுவல்) (61.8%)
  இந்தி (25.2%)
  உருது (1.2%)
  பிற (4.7%)

சிலிகுரி நகரம் உட்பட சிலிகுரி துணைப்பிரிவில் பெங்காலி அதிகாரப்பூர்வ மொழியாகும்.[7] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெங்காலி அதிகம் பேசப்படும் மொழியாகவும், அதைத் தொடர்ந்து இந்தி, நேபாளி, போச்புரி மற்றும் உருது ஆகிய மொழிகள் இருக்கிறது. [6]

நகரத்தில் பெரும்பான்மையான மொழியியல் குழுவை வங்காளிகள் உருவாக்குகின்றனர், அதைத் தொடர்ந்து பிகாரிகள், மார்வாடிகள், [[பஞ்சாபி மக்கள்|பஞ்சாபியர்கள், நேபாளிகள், ஒடியர்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளனர். 2001 ஆய்வறிக்கையின்படி, மொத்த மக்கள் தொகையில் பெங்காலி மொழி பேசுபவர்கள் 64.25 சதவீதத்தை கொண்டிருந்தனர். 2001இல் 30 வார்டுகளில், அவற்றின் மக்கள் தொகை 11.71% முதல் 98.96% வரை வேறுபடுகிறது. [8]

மதம்தொகு

சிலிகுரியில் பொதுவாகப் பின்பற்றப்படும் மதம் இந்து மதம், இசுலாம் மிகப்பெரிய சிறுபான்மை மதமாகவும், அதைத் தொடர்ந்து கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினரும் உள்ளனர்.[9] பெங்காலி இந்துக்கள் கொண்டாடும் முக்கிய மத விழாக்களில் துர்கா பூஜை, காளி பூஜை, சரசுவதி பூஜை, லட்சுமி பூஜை மற்றும் டோல் ஜாத்ரா, மற்றும் பெங்காலி முஸ்லிம்களுக்கு ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் ஆகியவை முக்கிய மத விழாக்களாகும். சிலிகுரியில் நேபாள மொழி பேசும் இந்துக்களுக்கு தஷைன் ஒரு முக்கியமான திருவிழா, இந்தி மற்றும் போஜ்புரி பேச்சாளர்கள் தீபாவளி, ஹோலி மற்றும் [சத் பூஜை]]களை கொண்டாடுகிறார்கள்.

சிலிகுரியில் மதம்[9]
மதம் சதவீதம்
இந்து சமயம்
91.98%
இசுலாம்
5.37%
கிறிஸ்தவம்
0.94%
பௌத்தம்
0.65%
பிற
1.05%

குறிப்பிடத்தக்க நபர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf
 2. 2.0 2.1 http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_3_PR_UA_Citiees_1Lakh_and_Above.pdf
 3. "Siliguri- the gateway to the northeast India". www.siligurismc.in. 8 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Siliguri-about location". www.wbtourismgov.in. 30 ஏப்ரல் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 "District Census Handbook Darjiling" (PDF). Census India. 6 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 "C-16 Population By Mother Tongue - Town level". census.gov.in. 16 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 7. "West Bengal Official Language Act, 1961" (PDF). West Bengal Judicial Academy. 7 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
 8. SILIGURI : AN URBAN STUDY IN SOCIO-ECONOMIC CONSIDERATIONS. 2001. http://ir.nbu.ac.in/bitstream/123456789/1141/17/164040.pdf. பார்த்த நாள்: 16 September 2020. 
 9. 9.0 9.1 "C-1 Population By Religious Community". census.gov.in. 16 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. Keerthivasan, K. (13 January 2014). "Sanil, Ankita are National champs". The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/sanil-ankita-are-national-champs/article5571879.ece. பார்த்த நாள்: 1 May 2019. 
 11. "Ankita Das and Soumyajit Ghosh are the youngest Indian players to qualify for the 2012 London Olympics". www.tribuneindia.com. 20 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Soumyajit Ghosh becomes youngest national table tennis champ". 20 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Man pulls train with hair in world record attempt". The Daily Telegraph. 19 September 2012. 29 ஜனவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Man uses his hair to pull Darjeeling Himalayan train". indiatvnews.com. 20 October 2016. 21 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Table Tennis Team - Women Melbourne 2006". thecgf.com. 24 ஏப்ரல் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 May 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Siliguri
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிகுரி&oldid=3728318" இருந்து மீள்விக்கப்பட்டது