சில்லறைக்காசு

வணிகத்திற்கென அடிக்கடி தேவைப்படும் சிறிய தொகை பணம் சில்லறைக்காசு (Petty cash) எனப்படும். இவை காசோலையாக செலுத்தப்படாது காசாக செலுத்தப்படும். வணிக நிறுவனத்தில் அடிக்கடி ஏற்படும் சிறு செலவுகளான அஞ்சல் செலவுகள், எழுதுபொருட் செலவுகள் (stationery), பயணச்செலவுகள் போன்றவைகளுக்காக இப்பணம் பயன்படுத்தப்படும். இத்தகைய கணக்குகளை பதிவதற்கு சில்லறை காசேடு எனும் பேரேடு உபயோகிக்கப்படும். தொடக்க கட்டுநிதியாக (initial fund) ஒரு குறிப்பிட்ட பணத்தொகை வழங்கப்படும் (ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டுநிதிகள் மாறுபடலாம்). பின்னர், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கிடையே வசக்கட்டு முறை (imprest system) மூலம் நிதி மீள்நிரப்பப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லறைக்காசு&oldid=1343645" இலிருந்து மீள்விக்கப்பட்டது