சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)

(சில்லுனு ஒரு காதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சூர்யா, ஜோதிகாவை அவர்களுக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதாக கதை; எதிரும், புதிருமாக இருக்கும் சூர்யா - ஜோதிகா ஜோடியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் மாற்றங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சில்லுனு ஒரு காதல்
இயக்கம்என்.கிருஷ்ணா
தயாரிப்புகே.இ.ஞானவேல்
கதைஎன்.கிருஷ்ணா
ஏ.சி துரை
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புசூர்யா
ஜோதிகா
பூமிகா சௌலா
ஒளிப்பதிவுஆர்.டி ராஜசேகர்
படத்தொகுப்புஅந்தோணி
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுசெப்டம்பர் 8, 2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை சுருக்கம் தொகு

கிராமத்தில் இருக்கும் குந்தவி (ஜோதிகா) மற்றும் அவள் தோழிகள் இருவருமாக மூன்று பேர். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குந்தவியின் தோழிகளுக்கு அதே கிராமத்திலேயே காதலர்கள் கிடைத்துவிட, குந்தவிக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டிய நிலை. வேண்டா வெறுப்பாக கௌதமை மணக்கிறாள்.

வாழ்க்கையே முடிந்துவிட்டது என எண்ணும் நேரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அவளை இன்பத்தில் ஆழ்த்துகிறது. கௌதம் (சூர்யா) இப்போது, கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை மெக்கானிக். இப்போது அவர்கள், உண்மையிலேயே காதலர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்புக்குச் சான்றாக ஒரு குழந்தை பிறக்கிறது. கம்பெனி விடயமாக கௌதம் வெளியூர் செல்ல நேர்கிறது.

ஒரு நாள் கௌதமின் பழைய டைரியை குந்தவி பார்க்கிறாள். அதில் அவரின் பழைய காதல் கதையை கௌதம் எழுதியிருப்பது தெரிகிறது. கல்லூரியில் படிக்கும்போது தன்னை விட இளைய மாணவியான ஐசுவர்யாவை (பூமிகா சாவ்லா) கௌதம் காதலிக்கிறார். ஐசுவர்யாவோ, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செல்ல மகள். இருவருக்கும் காதல் மலர்கிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு நடக்கிறது. கௌதம், ஐசுவர்யாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். முறைப்படி பதிவுத் திருமணம் நடப்பதற்குள் எம்.பி. அடியாள்களுடன் வந்து நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு ஐசுவர்யாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் மரணப் படுக்கையில் இருக்கும் தன் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கௌதம், குந்தவியை மணக்கிறார்.

இந்தக் கதை தெரிந்ததும் குந்தவியால் தாங்க முடியவில்லை. அந்த டைரியில் அவளுடன் ஒரு நாள் வாழ்ந்தால்கூட போதும் ஒரு யுகம் வாழ்ந்தது போல் இருக்கும் என்று கௌதம் எழுதியிருப்பார். தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற குந்தவி, ஐசுவர்யாவைத் தேடிச் செல்கிறார். கடைசியில் கண்டுபிடித்துத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கு கணவனும் பழைய காதலியும் ஒரு நாள் முழுக்கத் தனித்திருக்கவிட்டு குந்தவி, குழந்தையுடன் வெளியே சென்றுவிடுகிறார். கௌதம் மனைவியுடன் இணைந்தாரா.. அல்லது காதலியுடன் இணைந்தாரா? என்பது தான் கதை.

நடிகர்கள் தொகு

வகை தொகு

மசாலாப்படம்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கும்மி ஆடி"  சீர்காழி ஜி. சிவசிதம்பரம், சுவர்ணலதா, நரேஷ் ஐயர், தேனி குஞ்சரமாள், விக்னேஷ், குழுவினர் 6:54
2. "மாசா மாசா"  எஸ். பி. பி. சரண், சிரேயா கோசல் 5:43
3. "மச்சக்காரி"  சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ் 5:32
4. "நியூயார்க் நகரம் உறங்கும்"  ஏ. ஆர். ரகுமான் 6:19
5. "மாரிச்சம் யாதோ"  கரலிசா மான்டெய்ரோ, முகமது அசுலாம், கிருஷ்ணா ஐயர் 6:10
6. "சில்லென்று ஒரு காதல்"  தன்வி சா, பார்கவி பல்லவி 4:23
7. "முன்பே வா என் அன்பே"  சிரேயா கோசல், நரேஷ் ஐயர் 5:59
மொத்த நீளம்:
41:02

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு