சிவசாகர் ராம்கூலம்
சர் சிவசாகர் ராம்கூலம் (Seewoosagur Ramgoolam) ( பிறப்பு: 1900 செப்டம்பர் 18 - 1985 திசம்பர் 15) பெரும்பாலும் சாச்சா ராம்கூலம் என்று குறிப்பிடப்படுகிற இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதியும், அற்க்காரியங்களை செய்தவருமாவார். மொரிசிய சுதந்திர இயக்கத்தின் தலைவராக இருந்த இவர், மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும், மொரிசியசின் பிரதமராகவும், அதன் தலைமை ஆளுநராகவும் பணியாற்றினார். 1976 முதல் 1977 வரை ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைவராக இருந்தார். மொரிசியசு, தொழிலாளர் கட்சியின் தலைவராக, இவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி, 1968 இல் மொரிசியசை சுதந்திரத்திற்கு அழைத்துச் சென்றார்.
மரியாதைக்குரிய சர் சிவசாகர் ராம்கூலம் | |
---|---|
மொரிசியசின் தலைமை ஆளுநர் | |
பதவியில் 28 திசம்பர் 1983 – 15 திசம்பர் 1985 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெல்லி ரிவ் (இப்போது கெவால் நகர்), பிரித்தானிய மொரிசியசு | 18 செப்டம்பர் 1900
இறப்பு | 15 திசம்பர் 1985 போர்ட் லூயிஸ், மொரிசியசு | (அகவை 85)
குடியுரிமை | மொரிசியன் |
தேசியம் | மொரிசியன் |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி |
துணைவர் | சுசீலா ராம்சூரவன் (1922–1984)[1] |
பிள்ளைகள் | நவின்சந்திரா ராம்கூலம் சுனிதா[1] |
பெற்றோர் | மோகித் ராம்கூலம் (தந்தை) மாசுமதி ராம்சரன் (தாயார்) |
முன்னாள் கல்லூரி | இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பொருளியல் பள்ளி |
தொழில் | மருத்துவர் |
இணையத்தளம் | ssr.intnet.mu |
சுயசரிதை
தொகுகேவல் என்றும் அழைக்கப்படும் இவர், செப்டம்பர் 18, 1900 அன்று மொரிசியசில் உள்ள பெல்லி ரைவ் என்ற இடத்தில் பிளாக் மாவட்டத்தில் பிறந்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மொரிசியன், அதாவது இந்தோ-மொரிசியன் ஆவார்.
இவர் தனது ஆரம்பகால இந்தி, இந்திய கலாச்சாரம் தத்துவம் ஆகியவற்றில், உள்ளூர் மாலை பள்ளியில் (மொரிசிய இந்து வார்த்தையில் பைத்கா என்று அழைக்கப்பட்டது) படித்தார். அங்கு இந்து சமூகத்தின் குழந்தைகள் இந்து கலாச்சாரத்தின் வடமொழியையும், அதன் பார்வைகளையும் கற்றுக்கொண்டனர். ஆசிரியர் பிரார்த்தனைகளையும் பாடல்களையும் கற்பிப்பார்.'வேதங்கள், ராமாயணம், உபநிடதங்கள், பகவத் கீதை போன்ற புனித நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட சமசுகிருத பிரார்த்தனைகளும்,வற்றாத மதிப்புகளும் கற்பிக்கப்பட்டன.
இவர் ஒரு அறிவார்ந்த மாணவராக இருந்தார். மேலும் தனது தாய்க்கு தெரியாமல் மேடம் சிரிசு என்பவரால் நடத்தப்படும் அண்மையிலிருந்த ரோமன் கத்தோலிக்க உதவிப் பள்ளியில் சேர்ந்தார். இவர் வரலாறு, புவியியல், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.[2] ஏழு வயதில், இவர் தனது தந்தையை இழந்தார். பன்னிரெண்டாவது வயதில், ஒரு பசு மாட்டினால் கடுமையான விபத்துக்குள்ளானார், இது இவருக்கு இடது கண் பாதிப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் அரசியலையும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ராஷ் பிஹாரி போஸ் ஆகியோரின் கீழ் இந்திய சுதந்திரத்திற்கான அப்போதைய போராட்டம் குறித்த இவரது மாமாவுக்கும் அவரது நண்பர்கள் வட்டத்திற்கும் இடையிலான அரசியல் விவாதங்களை இவர் கேட்பார். இந்த ஆரம்ப உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் இவரது அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையாக அமைந்தன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sunita Ramgoolam-Joypaul : « Maman doit être fière de Navin et moi" (in பிரெஞ்சு). Le Defimedia Group. Archived from the original on 15 December 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
- ↑ Our Struggle, 20th century Mauritius, Seewoosagur Ramgoolam, Anand Mulloo
- ↑ "The Man and his Vision". Archived from the original on 19 August 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Birth centenary celebrations of Sir Seewoosagur Ramgoolam
- Sir Seewoosagur Ramgoolam, the Rare Diplomat, by Joseph Tsang Mang Kin பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99903-0-626-2