சிவபால் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

சிவபால் சிங் யாதவ் (Shivpal Singh Yadav)(பிறப்பு: பிப்ரவரி 16, 1955) என்பவர் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் பிறந்த இவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சிற்றப்பா ஆவார். இவர் 2007 முதல் 12 வரை எட்டாவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த்நகர் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் (லோஹியா) [5] நிறுவனர் ஆவார்.

சிவபால் சிங் யாதவ்
உ.பி. சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 அக்டோபர் 1996
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
தொகுதிஜஸ்வந்தநகர்
அமைச்சர், உ.பி. சட்டமன்றம்
பதவியில்
15 மார்ச் 2012 – 24 அக்டோபர் 2016
பதவியில்
06 செப்டம்பர் 2003[1] – 11 மே 2007
உத்திரப் பிரதேசம் மாநிலத் தலைவர், சமாஜ்வாதி கட்சி
பதவியில்
13 செப்டம்பர் 2016 – 1 சனவரி 2017
முன்னையவர்அகிலேஷ் யாதவ்
பின்னவர்நரேஷ் உத்தம் பட்டேல்
பதவியில்
6 சனவரி 2009 – 4 சூன் 2009[2]
முன்னையவர்ராம் சரண் தாசு
பின்னவர்அகிலேஷ் யாதவ்
உத்திரப் பிரதேசம் மாநில பொறுப்பாளர், சமாஜ்வாதி கட்சி
பதவியில்
12 ஏப்ரல் 2016[3] – 13 செப்டம்பர் 2016
முன்னையவர்பதவி தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்n/a
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், (உ.பி.)
பதவியில்
26 மே 2009 – 9 மார்ச் 2012
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
பின்னவர்சுவாமி பிரசாத் மெளரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 பெப்ரவரி 1955 (1955-02-16) (அகவை 69)
சைபை, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் (லோஹியா)
பிற அரசியல்
தொடர்புகள்
சமாஜ்வாதி கட்சி
(1992- 2018,2022-)
துணைவர்சரளா யாதவ்
பிள்ளைகள்2
வாழிடம்(s)இலக்னோ, உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிகரம் சேத்திர முதுநிலைக் கல்லூரி, எடாவா
கான்பூர் பல்கலைக்கழகம் (இளங்கலை, 1976),
லக்னோ கிறித்துவக் கல்லூரி
லக்னோ பல்கலைக்கழகம் (இளநிலை உடற் கல்வியியல், 1977)[4]

பணி தொகு

யாதவ், மாயாவதி ஆட்சியின் போது உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.[6]

31 ஜனவரி 2017 அன்று, யாதவ் 2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியல் கட்சியை உருவாக்கப் போவதாக அறிவித்தார். பின்னர் 28 செப்டம்பர் 2018 அன்று, பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.[7] இவரது கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 24, 2018 அன்று, அதிகாரப்பூர்வமாக பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) என்று பெயரில் ஒப்புதல் வழங்கியது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.
  2. "यूपी: अखिलेश को सपा की कमान". 4 June 2009.
  3. "शिवपाल का कद बढ़ा, बने सपा के यूपी प्रभारी". News18 Hindi. http://khabar.ibnlive.com/news/politics/shivpal-yadav-appointed-as-samajwadi-partys-incharge-in-up-469016.html. 
  4. "Shivpal Singh Yadav(Samajwadi Party(SP)):Constituency- JASWANTNAGAR(ETAWAH) - Affidavit Information of Candidate".
  5. "State elections 2007 result". பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
  6. "Leader of Opposition, UP Assembly". பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
  7. ravi.srivastava (2018-09-28). "शिवपाल की पार्टी का नाम प्रगतिशील समाजवादी पार्टी, एक साल पहले करा चुके हैं रजिस्ट्रेशन". Dainik Bhaskar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2018-12-09.
  8. "Shivpal Yadav floats new party- Pragatisheel Samajwadi Party (Lohia)". The Indian Express (in Indian English). 2018-10-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபால்_சிங்_யாதவ்&oldid=3926481" இலிருந்து மீள்விக்கப்பட்டது