கெமர் ரூச்

(சிவப்பு கெமர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெமர் ரூச் (Khmer Rouge) என்பது கம்போடியாவை ஆண்ட கம்யூனிச அரசியற்கட்சியின் பெயராகும். இதன் பெயர் 1975 முதல் 1979 வரை மக்களாட்சி கம்பூச்சியா எனப் பெயர் மாற்றப்பட்டிருந்தது. "கெமர் ரூச்" என்ற சொல் பிரெஞ்சு மொழியில் "சிவப்பு கெமர் மக்கள்" என்று பொருள்.

மக்களாட்சி கம்பூச்சியாவின் கொடி

பொல் பொட் தலைமையிலான கெமர் ரூச் படையினர் 1.5 மில்லியன் கம்போடிய மக்களை படுகொலை செய்தமைக்காக நினைவுகூரப்படுகின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1/5 பங்கினராவர். கெமர் ரூச் 20ம் நூற்றாண்டில் நாடொன்றை ஆண்ட மிகவும் பயங்கரமான அரசு என்று கருதப்படுகிறது.

நான்காண்டுகள் அரசாட்சியின் பின்னர், வியட்நாம் சோசலிசக் குடியரசின் படையெடுப்பை அடுத்து கெமர் ரூச் அரசு அகற்றப்பட்டு சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 1990களில் கெமர் ரூச் இயக்கம் தாய்லாந்தில் நிலை கொண்டு மேற்கு கம்போடியாவில் தனது தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. 1996 இல் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டினை அடுத்து, பொல் பொட் தனது இயக்கத்தை அதிகாரபூர்வமாகக் கலைத்தார். குற்றச்சாட்டுகள் எதற்கும் முகம் கொடுக்காமல் பொல் பொட் 1998, ஏப்ரல் 15 இல் இறந்தார்[1].

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமர்_ரூச்&oldid=3241342" இலிருந்து மீள்விக்கப்பட்டது