சிவ. திருச்சிற்றம்பலம்

சிவ. திருச்சிற்றம்பலம் (பிறப்பு: ஆகஸ்ட் 1, 1946 ) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை மா. சிவகுருநாத பிள்ளை. முனைவர் பட்டம் பெற்று கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது திருமுறை சித்தாந்த ஆய்வு மைய இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். “திருமங்கையாழ்வார் வாழ்வும் வாக்கும்” முதலான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். திருமுறைச் சான்றோர் வாழ்வும் வாக்கும், இறையருள் வடிவங்கள், சிவன் திருத்தலங்கள் முதலிய 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தேவாரமாமணி, தமிழ்மறை மாமணி சைவநெறித் தமிழ் வல்லார் விருது, கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. விருது போன்றவைகளைப் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு தொகு

இவர் எழுதிய இரண்டு நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கின்றன.

  1. “ஸ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் பகுதி 1, 2.” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  2. “சைவத் தொகையகராதி” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ._திருச்சிற்றம்பலம்&oldid=2765781" இலிருந்து மீள்விக்கப்பட்டது