சி. எசு. ஜா (C.S. Jha-பிறப்பு 1934) என்பவர் ஓர் இந்தியப் பொறியாளர், பேராசிரியர், கல்வி நிர்வாகி ஆவார். ஜா 1991 முதல் 1993 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 18வது துணைவேந்தராகப் பணியாற்றினார்.[1][2]

சி. எசு. ஜா
18வது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
1 மே 1991 – 14 சூன் 1993
நியமிப்புஇரா. வெங்கட்ராமன்
முன்னையவர்இர. பி. இரசுதோகி
பின்னவர்தே. நா. மிசுரா
தனிப்பட்ட விவரங்கள்
முன்னாள் கல்லூரிபட்னா பல்கலைக்கழகம்
பிரிசுடல் பல்கலைக்கழகம்

ஜா இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தினை பட்னா பல்கலைக்கழகத்திலும் மின் பொறியியலில் முனைவர் பட்டத்தினை பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர் [1]

பின்னர் 1962ஆம் ஆண்டில் தில்லி, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பேராசிரியராக 1994-இல் ஓய்வு பெற்றார். இந்தக் காலகட்டத்தில் ஜா இதொக பொறியியல் புலத் தலைவர் ஆனார். 1974 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கரக்பூரின் இயக்குநர் ஆனார். 1979 முதல் 1984 வரை இந்திய அரசின் கல்வி (தொழில்நுட்ப ஆலோசகர்) ஆன ஜா 1991 முதல் 1993 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார்.[1][3][4]

1994ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையத்தின் தலைவராக ஜா நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Indian Engineering Congress. "Prof C S JhaMemorial Lecture" (PDF). ieindia.org.
  2. "'BHU has nurtured communal harmony for over 100 years'". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-11-22. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  3. "Banaras Hindu University, [BHU], Varanasi-221005, U.P., India. - Banaras Hindu University, Varanasi, India". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  4. "3rd Convocation of the National Institute of Technology Rourkela" (PDF). National Institute of Technology, Rourkela.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
01 மே 1991 - 14 சூன் 1993
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எசு._ஜா&oldid=4133465" இலிருந்து மீள்விக்கப்பட்டது