சி. ஏ. முகிலன்

சி. ஏ. முகிலன் (C. A. Muguilan, 5 மார்ச் 1933 - 12 மே 1980) தமிழ்த் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவரது இயற்பெயர் சி. ஏ. பெருமாள். புதுவை மாநிலத்தில் உள்ள சின்ன காளப்பெட் என்னும் இடத்தில் ஐயாவு செட்டியார், வல்லதம்மாள் ஆகியோருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். கற்பகம் போன்ற திரைப்படங்களுக்கு கதைகள் எழுதியும், துணை இயக்குநராகவும் பணியாற்றியவர். 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரே முத்தம் என்ற படத்தை எழுதியும் இயக்கியும் உள்ளார். ஏ. வி. எம், இளையராஜா, கண்ணதாசன் போன்ற படைப்பாளிகளுடன் இணைந்து தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஏ._முகிலன்&oldid=1581154" இருந்து மீள்விக்கப்பட்டது