சி. கே. ஜெயின்
இந்திய அரசியல்வாதி
சி. கே. ஜெயின் (C. K. Jain; 3 மே 1935 – 12 திசம்பர் 2021) என்பவர் 10வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் மக்களவை செயலாளராகவும் 1 சனவரி 1992 முதல் 31 மே 1994 வரை [1] பணியாற்றினார்.
சி. கே. ஜெயின் | |
---|---|
பிறப்பு | 3 மே 1935 இட்டாவா, உத்தரப்பிரதேசம், இந்தியா |
இறப்பு | குருகிராமம், அரியானா, இந்தியா | 12 திசம்பர் 2021
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
வாழ்க்கைத் துணை | கமலா தேவி |
பிள்ளைகள் | 1 மகன் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் உத்தரப்பிரதேசத்தின் இட்டாவாவில் பிறந்தார். இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார். இவர் இட்டாவா மாவட்ட நீதிமன்றத்தில் (1954-55) வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் மக்களவை செயலகத்தில் 1955ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இவர் 1992-ல் மக்களவை மற்றும் மக்களவை செயலகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jain, C.K. (1992). Who's Who 10 Lok Sabha. New Delhi: Lok Sabha Secretariat. pp. 7–8.
- ↑ India. Parliament. Lok Sabha. Secretariat (1992). Parliament of India, the Ninth Lok Sabha, 1989–1991: a study. Northern Book Centre. pp. 29–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-019-2. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.