சி. சந்திரசேகரன்
சி. சந்திரசேகரன் (C. Chandrasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
சந்திரசேகரன் 1996 தேர்தலில் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பழங்குடியினர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[1]
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதால், 2006 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் சேர்ந்தார், 2016 தேர்தலில் அவர் மீண்டும் அதிமுக வேட்பாளராக சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 7. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "List of successful candidates" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.