சி. வித்தியாசாகர் ராவ்

சின்னமனேனி வித்தியாசாகர் ராவ் (பிறப்பு 1942) 30 ஆகத்து 2014 இலிருந்து மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநராகச் செயல்படுபவர் [2] . கொனியேட்டி ரோசையாவின் பதவி காலம் முடிவடைந்ததால் 2, செப்டம்பர் 2016இலிருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்படுடார். [3] . 1999 கால அடல் பிகாரி வாச்பாய் அரசில் இவர் உள்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 12ஆவது மற்றும் 13ஆவது மக்களவைக்குத் தெலுங்கான மாநிலத்திலுள்ள கரீம்நகர் தொகுதியிலிருந்து பாசக சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னமனேனி வித்தியாசாகர் ராவ்
సి.హెచ్. విద్యాసాగర్ రావు
Chennamaneni Vidyasagar Rao
மே 2015இல் மேற்கத்திய கடற்படைத் தலைமையகத்திற்கு வித்தியாசாகர் (நடு) வருகை புரிந்தபோது.
21வது மகாராட்டிர ஆளுநர்
In office
30 ஆகத்து 2014 – 01 செப்டம்பர் 2019
முன்னையவர்கே. சங்கரநாராயணன்
Succeeded byபகத்சிங் கோசியாரி
தமிழக ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)
In office
02 செப்டம்பர் 2016 – 06 அக்டோபர் 2017
முன்னையவர்கொனியேட்டி ரோசையா
Succeeded byபன்வாரிலால் புரோகித்
Member of the இந்திய Parliament
for கரீம்நகர்
In office
1998–2004
முன்னையவர்எல். ரமணா
Succeeded byகல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
Member of the ஆந்திரச் சட்டப் பேரவை Assembly
for மெட்பள்ளி
In office
1985-1998
உள்துறை, வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகங்களில் துணை அமைச்சர்
In office
1999–2004
Prime Ministerஅடல் பிகாரி வாச்பாய்
Personal details
Born4 பெப்ரவரி 1942 (1942-02-04) (அகவை 82)[1]
நகரம், கரீம்நகர், ஐதராபாத்து இராச்சியம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய தெலுங்கானா, இந்தியா)இந்தியா
Nationalityஇந்தியர்
Spouseவினோதா
Children3
Known forபாசக தலைவர்

இவர் கரீம்நகர் மாவட்டத்திலுள்ள நகரம் என்ற சிற்றூரில் சி. சீனிவாச ராவுக்கும் சந்திரம்மாவுக்கும் வேலமா தோரா குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. இவர் பியுசி எனப்படும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை கரீம்நகர் மாவட்டத்திலுள்ள வேமுலவாடா நகரத்திலும் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை மகாராட்டிராவிலுள்ள நான்டெட் என்ற ஊரிலும் சட்டப் படிப்பை உசுமானியா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

சட்டம் முடித்து வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் 1972இல் கரீம்நகர் மாவட்ட சனசங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருக்கடி நிலையின் போது சிறை சென்றார். ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 1985லிருந்து 1998 வரை மேத்பல்லி சட்டமன்ற உறுப்பினராகச் பாசக சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1998, 1999 மக்களவை தேர்தலில் கரீம்நகர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998இல் ஆந்திர பாசக தலைவராகச் செயலாற்றினார்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.thehindu.com/news/national/telangana/karimnagar-bjp-celebrates-as-vidyasagar-rao-is-appointed-as-governor-of-maharashtra/article6353328.ece
  2. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/c-vidyasagar-rao-to-be-sworn-in-as-maha-governor-on-august-30/articleshow/41116725.cms
  3. "Chennamaneni Vidyasagar Rao sworn in as Maharashtra Governor". The Financial Express (Telangana, India). 30 August 2014. http://www.financialexpress.com/news/chennamaneni-vidyasagar-rao-sworn-in-as-maharashtra-governor/1283890. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வித்தியாசாகர்_ராவ்&oldid=3423136" இலிருந்து மீள்விக்கப்பட்டது