சீதாமரி மாவட்டம்

(சீதாமடி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீதாமரி மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் தும்ராவில் உள்ளது. இந்த மாவட்டம் நேபாளத்தை ஒட்டி அமைந்துள்ளது.

சீதாமரி
Sitamarhi
மாவட்டம்
{{{Local}}}
சீதாமரி
Sitamarhiமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத் கோட்டம்
தலைமையகம்தும்ரா
பரப்பு2,294 km2 (886 sq mi)
மக்கட்தொகை3423574 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,491/km2 (3,860/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை5.71%
படிப்பறிவு53.53%
பாலின விகிதம்899
மக்களவைத்தொகுதிகள்சீதாமரி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைரீகா, பத்னாஹா, பரிஹார், சுர்சண்டு, பாஜ்பட்டி, சீதாமரி, ரூன்னீசைத்பூர், பேல்சண்டு
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ. 104
சராசரி ஆண்டு மழைபொழிவு1200 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட நிர்வாகம் தொகு

வருவாய் வட்டங்கள் தொகு

சீதாமரி மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  • சீதாமரி சதர்
  • பேல்சந்த்
  • பூப்ரி

ஊராட்சி ஒன்றியங்கள் தொகு

இம்மாவட்டம் 17 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. அவைகள்:

1. தும்ரா
2. ருன்னி சேத்பூர்
3. பரிகார்
4. பாத்நகா
5.சோன்பார்சா
6. பாஜ்பட்டி
7. சூர்சந்த்
8. ரிகா
9.நன்பூர்
10. பூப்ரி
11. பைர்கனியா
12. போக்காரா
13.சுப்பி
14. பேல்சந்த்
15. மேஜர்கஞ்ச்
16. பர்சௌனி
17. சாரௌத்

பொருளாதாரம் தொகு

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சீதாமரி மாவட்ட மக்கள்தொகை 34,23,574 ஆகும்.[3] இம்மாவட்டடத்தில் மக்கள்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1491 நபர்கள் வசிக்கின்ரனர்.[3] இம்மாவட்டத்தில் இந்தி மொழி 82.73%, மைதிலி மொழி 3.25% மற்றும் உருது 13.96% பேசுகின்றனர்.[4] மக்கள் தொகையில் இந்துக்கள் 78.06% மற்றும் இசுலாமியர் 21.62% உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "District Census 2011". Census2011.co.in. 2011. Archived from the original on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  4. 2011 Census of India, Population By Mother Tongue

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாமரி_மாவட்டம்&oldid=3929985" இலிருந்து மீள்விக்கப்பட்டது