சீந்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Ranunculales
குடும்பம்:
Menispermaceae
பேரினம்:
Tinospora
இனம்:
T. cordifolia
இருசொற் பெயரீடு
Tinospora cordifolia
(Thunb.) Miers

சீந்தில் (Tinospora cordifolia) என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

பெயர்கள்

தொகு

சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயரும், அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற பொருளில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.[1]

பயன்கள்

தொகு

சித்த மருத்துவத்தில்[2] சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பர். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருந்து தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பயன்படுகின்றது. பல ஆண்டுகளாக மருந்தாக பயன்படுத்தப்பட்டாலும் இச்செடியில் எந்த மருத்துவ குணமும் உள்ளதாக நிருபிக்கப்படவில்லை.[3]

பக்க விளைவுகள்

தொகு

இச்செடியை தொதிக்கவைத்தோ அல்லது இச்செடியை மூலமாகக் கொண்ட மருந்தையோ பயன்படுத்தியவர்களுக்கு கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளது.[4][5] மேலும் ஏப்ரல் 2020 முதல் சூலை 2021 வரை இச்செடியை உட்கொண்ட 43 பேர்களுக்கு கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.[6][7]

மேற்கோள்

தொகு
  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (19 சனவரி 2019). "ஆயுளை நீட்டிக்கும் சீந்தில்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2019.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  3. "Tinospora". Drugs.com. 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
  4. Banjot Kaur (17 February 2022). "As COVID Surged, India Had a Silent Outbreak of Giloy-Induced Liver Injury". Science: The Wire.
  5. Nagral, Aabha; Adhyaru, Kunal; Rudra, Omkar S. et al. (2021-07-02). "Herbal Immune Booster-Induced Liver Injury in the COVID-19 Pandemic - A Case Series". Journal of Clinical and Experimental Hepatology 11 (6): 732–738. doi:10.1016/j.jceh.2021.06.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-6883. பப்மெட்:34230786. 
  6. Ray, Kalyan (6 March 2022). "Ayurvedic drug backed by AYUSH Ministry causes liver damage, says study". Deccan Herald (The Printers, Mysore). https://www.deccanherald.com/national/ayurvedic-drug-backed-by-ayush-ministry-causes-liver-damage-says-study-1088604.html. 
  7. Kulkarni, Anand V.; Hanchanale, Pavan; Prakash, Vikash et al. (6 February 2022). "Tinospora cordifolia ( giloy)–induced liver injury during the COVID‐19 pandemic — Multicenter nationwide study from India". Hepatology Communications: hep4.1904. doi:10.1002/hep4.1904. https://aasldpubs.onlinelibrary.wiley.com/doi/10.1002/hep4.1904. பார்த்த நாள்: 27 அக்டோபர் 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீந்தில்&oldid=3997111" இலிருந்து மீள்விக்கப்பட்டது