சீனாவில் பட்டுத் தொழில்

சீனா உலகின் மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளராக உள்ளது. சீன பட்டுகளின் பெரும்பகுதி மல்பெரி பட்டுப்புழுக்களில் இருந்து உருவாகிறது. அதன் வாழ்க்கை சுழற்சியில், பூச்சிகள் மல்பெரி மரங்களின் இலைகளை  உணவாக உண்கின்றன. சீனாவில் பட்டுக்கூடு உற்பத்தியில் மல்பெரி அல்லாத பட்டுப்புழுவான  சீன துஸா அந்துப்பூச்சியில் (Antheraea spp.) இருந்து காட்டுப்பட்டு பெற கவனம் செலுத்துகிறது. இந்த அந்துப்பூச்சி பொதுவாக மல்பொி அல்லாத மரங்களின் (எ.கா. ஓக்ஸ்) இலைகளை உண்கின்றன. இதன்   லார்வா ஸ்பின் கர்சர், மல்பெரி பட்டு அந்துப்பூச்சிகளை விட மஞ்சள் நிற இழைகளை உருவாக்குகின்றன.[1]

The process of making silk from Sericulture by Liang Kai, c. 13th century

2005 ஆம் ஆண்டில், உலகளாவிய கச்சா பட்டு உற்பத்தியில் 74 சதவிகிதமும், உலக ஏற்றுமதி சந்தையில் 90 சதவிகிதமும் சீனா பெற்றுள்ளது.[2]

தாெழிற்துறை திட்டங்கள் தொகு

சீனாவில்  உற்பத்தி செய்யப்படும் பட்டின் தரம் மற்றும் அளவு இரண்டையும் உயர்த்தும் புதுப்புது வசதிகளை சீன உள்ளூர் அரசாங்கங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய வசதிகளால் உற்பத்தி மற்றும் விநியோக திறன்களை அதிகப்படுத்துவதால் குறிப்பிடத்தக்க அளவில் வருவாய் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பலவகையான ஊக்க நடவடிக்கைகள் உள்ளன. இந்த அரசாங்க ஊக்குவிப்புகளில் அரசு நில கொள்கை விதிவிலக்குகள், வரிச்சலுகைகள், திட்ட முன்னுரிமைமுறை (மறுஆய்வு மற்றும் பயன்பாடுகளின் ஒப்புதல்) மற்றும் ஆற்றல் சலுகைகள் (அனுமதி, நிறுவனம், தண்ணீர், மின்சார, எரிவாயு, முதலியன தொடர்பான கட்டணம் தள்ளுபடி பெறலாம்) போன்றவை இந்த அரசாங்க ஊக்கத்தொகைகளில் அடங்கும்.

நிலவியல் தொகு

சீனாவின்  கிழக்கு கடற்கரைப் பகுதி அல்லாத நிலப்பகுதிகளில் பட்டுத் தொழில் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதாவது சீனாவின் மேற்கத்திய பகுதிகளில் நிலவும் அதன் இயற்கை வானிலை மற்றும் மண் நிலைமைகள் காரணமாக அப்பகுதிகளில் பெரும்பாலும் பட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. இவை பெரும்பாலும் சோங்கிங் மற்றும் யுன்னான் பகுதிகள் ஆகும். மேலும் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தின் விலை மற்றும் ஊதிய செலவு அதிகரித்து வருவதால், பட்டுத் தொழிலானது மேற்கு நோக்கி நகர்கிறது. அரசாங்கத்தின் முன்னுரிமை கொள்கைகளால், சோங்கிங் பகுதியில் பட்டு தொழிலானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது.

வெளிநாட்டு முதலீடு தொகு

பட்டு தொழிலை வளர்க்க வெளிநாட்டு முதலீடு உதவியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் உள்ளூர் பட்டு நிறுவனங்களை மேம்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளன

மேற்காேள்கள் தொகு

  1. Puette, Loren. "ChinaAg: Silk Production". Archived from the original on 1 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  2. Ministry of Commerce Statistics
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_பட்டுத்_தொழில்&oldid=3924263" இலிருந்து மீள்விக்கப்பட்டது