சீனிவாசா பொறியியல் கல்லூரி

சீனிவாசா பொறியியல் கல்லூரி (Shreenivasa Engineering College) என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகை பள்ளிப்பட்டியில் 2010-2011 கல்வியாண்டுமுதல் இயங்கிவரும் ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.

ஸ்ரீ நிவாசா பொறியியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2010
அமைவிடம்,
வளாகம்பள்ளிப்பட்டி
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம், தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) ஆகியவற்றால் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

வசதிகள்

தொகு

இந்த கல்லூரியானது 10.85 ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன ஆய்வக வசதிகள், இருபாலருக்கும் தனித்தனியான விடுதிகள், விளையாட்டு அரங்கம், இணைய வசதி, எண்ணியல் நூலகம், கணினி மையம், போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

படிப்புகள்

தொகு

இளநிலை

தொகு
  1. வேளாண் பொறியியல்
  2. உயிர் மருத்துவப் பொறியியல்
  3. இயந்திரப் பொறியியல்
  4. மின் பொறியியல்
  5. கணினி அறிவியல் பொறியியல்

முதுநிலை

தொகு
  1. கட்டமைப்புப் பொறியியல்
  2. கேட்/கேம் பொறியியல்
  3. கணினி அறிவியல் பொறியியல்
  4. ஆற்றல் பொறியியல்

வெளி இணைப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு