சீமான் (அரசியல்வாதி)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; திரைப்பட இயக்குநர்

சீமான் (Seeman, பிறப்பு:08 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார்.[1] இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துகிறார். இவர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருகிறார்.[2][3][4][5][6][7][8]

சீமான்
Tamil Eelam Champion Seeman Speech Outside UN headquarters Geneva 002.jpg
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 8, 1966 (1966-11-08) (அகவை 53)
அரனையூர், சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கயல்விழி (திருமணம்.2013)
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பாடகர், அரசியல்வாதி
இணையம் www.naamtamilar.org

வாழ்க்கை வரலாறு

சீமான் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள, இளையான்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் ஆகியோர்கள் ஆவர்.[1] இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.[9][10]

திரைத்துறை வாழ்க்கை

கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இவரின் முதல் படமான பிரபு, மதுபாலா கொண்டு இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் சத்தியராஜை கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியடைந்தது. நீண்ட கால இடைவேளைக்குப் பின் மாதவன், பூஜா, வடிவேலு போன்றோர்களைக் கொண்டு இயக்கிய தம்பி படம் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில் மாதவனை வைத்து இயக்கிய வாழ்த்துக்கள் திரைப்படம் பெரும் இழப்பைச் சந்தித்தது. இப்படம் முழுவதும் கலப்படமற்ற தூய தமிழ் வசன நடைக்கொண்டு உருவாக்கியிருந்தார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.[11]

ஈழ ஆதரவு

சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனுக்குத் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.[12] ஈழ ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்தியமைக்காக ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[சான்று தேவை][13][14][15]

நாம் தமிழர் கட்சி

 
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.

சில காலம் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில், நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரளா, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத வருவதை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.[16].[17][18][19]. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்தும் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.[20][21][22][23][24] ஆனால் அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.[25][26][27][28][29]

கட்சியின் சின்னம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாய் அறிவித்து அதற்கானச் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னம் மறுக்கப்பட்டது. அதனை மேகாலாயாவிலுள்ள ஒரு மாநிலக் கட்சி தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்டச் சின்னமாகப் பெற்றுவிட்டது ௭னக் கூறி மறுத்தார்கள். பிறகு தேர்தல் ஆணையத்தின் சின்னப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கோரியதால், அதனை ஒதுக்கினார்கள்.[30]

நாடாளுமன்ற தேர்தல் - 2019

ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 23.03.2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.[31] இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதில் நீலகிரி மக்களவை தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை அடைந்தது.

வேட்பாளர் பட்டியல்

2019 இந்திய பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பட்டியல்

22 தொகுதி இடைத்தேர்தல் - 2019

18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார்.[32][33]

கட்சியின் வளர்ச்சி

வருடம் தேர்தல் பெற்ற வாக்குகள் விழுக்காடு %
2016 சட்டமன்ற தேர்தல் 458104 1.1%
2017 ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல் 3802 2.15%
2019 22 தொகுதி இடைத்தேர்தல்
தமிழகம் 138419 3.15%
புதுச்சேரி 1084 4.72%
மொத்த வாக்குகள் 139503
2019 நாடாளுமன்ற தேர்தல்
தமிழகம் 1645185 3.89% [34]
புதுச்சேரி 22857 2.89%
வேலூர் 26995 2.63%
மொத்த வாக்குகள் 1695037

தைப்புரட்சியில் சீமானின் பங்கு

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீமான் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்.

 • 2014 மே 8 இல் சல்லிக்கட்டு மீதான தடை என்பது தமிழர் பண்பாட்டின் மீதான் அத்துமீறல் என்று சீமான் அறிக்கை வெளியிட்டார்.[35]
 • 2015 சனவரி 16 இல் சல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சீமான் எச்சரித்தார்.[36]
 • 2016 சனவரி 19 இல் மதுரைமாவட்டம் பாலமேட்டில் தடையைமீறி சல்லிக்கட்டு நடத்தவிருந்த சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.[37][38] மார்ச் 23 ஆம் தேதி சீமானால் வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவில் சல்லிக்கட்டின் அவசியமும் நாட்டுமாட்டின் பாதுகாப்பும் பற்றி விரிவாக விளக்கம் தரப்பட்டிருந்தது.[39] 27 டிசம்பர் 2016 ஜல்லிக்கட்டுக்காக நாம் தமிழர் கட்சி சார்பாக உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.[40]
 • 2017 சனவரி 21 இல் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியால் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சீமானின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சீமான் பரிசுகளும் வழங்கினார்.[41] சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியும் இதுவேயாகும்.[42]

இயக்கிய திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு குறிப்பு சான்று
பாஞ்சாலங்குறிச்சி 1996
இனியவளே 1998 [43]
வீரநடை 2000 [44]
தம்பி 2006 தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது [45]
வாழ்த்துகள் 2008 [46]

கதை/திரைக்கதை

திரைப்படம் ஆண்டு குறிப்பு சான்று
பசும்பொன் 1996

நடித்த திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு கதாபாத்திரம் இயக்குநர் குறிப்பு சான்று
அமைதிப்படை 1994 மணிவண்ணன்
ஆடும் கூத்து 2005 டி. வி. சந்திரன்
பொறி 2007 மகாதேவன் சுப்பிரமணியம் சிவா [47]
பள்ளிக்கூடம் 2007 முத்து தங்கர் பச்சான் [48]
எவனோ ஒருவன் 2007 வெற்றி மாறன் நிஷிகாந்த் காமத் [49]
மாயாண்டி குடும்பத்தார் 2009 விருமாண்டி மாயாண்டி ராசு மதுரவன் [50]
மாஸ்கோவின் காவிரி 2010 அவரே ரவி வர்மன் சிறப்பு தோற்றம் [51]
மகிழ்ச்சி 2010 வி. கௌதமன் [52]
உச்சிதனை முகர்ந்தால் 2011 சார்லஸ் அந்தோனி புகழேந்தி தங்கராஜ் [53]
நாகராஜ சோழன் ௭ம்ஏ ௭ம் ௭ல் ஏ 2013 மணிவண்ணன் [54]
கண்டுபிடி கண்டுபிடி TBA ராம சுப்புராயன் [55]
தவம் TBA ஆர்.விஜய்ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.சூரியன் [56]
மிக மிக அவசரம் TBA சுரேஷ் காமாட்சி [57]
அமீரா TBA இரா. சுப்ரமணியன் [58]

நூல்கள்

 • வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010)
 • திருப்பி அடிப்பேன்

மேற்கோள்கள்

 1. 1.0 1.1 "சீமான் சுயவிபரம்".
 2. "சீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா ?".
 3. "5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்".
 4. "'தமிழே அவமதிக்கப்பட்டிருக்கும்போது கள்ளமௌனம் சாதிப்பது ஏன்?": சீமான் சீற்றம்".
 5. "நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும் ? - சீமான் ஆவேச பதில்".
 6. "தமிழர் தன்னாட்சி பற்றிய சீமானின் கருத்து".
 7. "நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறை: பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி நாம் தமிழர் கட்சி அதிரடி".
 8. "ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க சீமான் அழைப்பு".
 9. "சீமான் சுயவிவரம்".
 10. "Seeman Kayalvizhi Marriage Tomorrow in Nandanam YMCA Chennai".
 11. "சினிமா ஒரு சாக்கடை என பேசியே தமிழ் பெண்களை தடுத்துவிட்டார்கள் - சீமான் பேச்சு".
 12. "‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை".
 13. "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு".
 14. "வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்".
 15. "இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்: சீமான்".
 16. "எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்".
 17. "எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்".
 18. "“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..!".
 19. "தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர சீமான் வலியுறுத்தல்".
 20. "234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்".
 21. "தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்".
 22. "தேர்தல் களத்தில் தனித்து, போராடப்போகும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி!".
 23. "நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் சீமான் பேட்டி".
 24. "மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கள் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர்".
 25. "தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு".
 26. "காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்".
 27. "உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்".
 28. "நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்".
 29. "தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்".
 30. "நாம் தமிழர் கட்சி புதிய விவசாயி சின்னம் அறிமுகம்.".
 31. "வேட்பாளர்கள் அறிமுகம்".
 32. "திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும்: சீமான் பேச்சு".
 33. "பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு".
 34. "1.07 டு 3.87%... 'நாம் தமிழர்' வாக்குவங்கி அதிகரித்தது எப்படி?".
 35. சீமான் வெளியிட்ட அறிக்கை 2014, ஜல்லிக்கட்டுதடை தமிழர் பண்பாட்டின் மீதான் தடை சீமான்.
 36. சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு 2015, ஜல்லிக்கட்டுக்கு மாநிலம்தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் சீமான்.
 37. சீமான் கைது, நாம் தமிழர்கட்சி ஜல்லிக்கட்டு நடத்தபோவதாக சீமான் கைது.
 38. கைது செய்யப்பட்ட சீமான், நாம் தமிழர்கட்சியினர் கைது.
 39. செயல்பாட்டு வரைவு, நாம் தமிழர்கட்சி செயல்பாட்டு வரைவில் ஜல்லிக்கட்டு.
 40. ஜல்லிக்கட்டு உண்ணாநிலை போராட்டம் , நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு உண்ணாநிலைப்போராட்டம்.
 41. நாம் தமிழர் கட்சியின் ஜல்லிக்கட்டு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான்.
 42. காளைமாட்டினை நிணைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும் சீமான், தைப்புரட்சி நினைவுச்சின்னம்.
 43. http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Iniyavalle_122138.html
 44. http://www.bbthots.com/reviews/2000/vnadai.html
 45. http://www.sify.com/movies/thambi-review-tamil-pclvQCcdiiidb.html
 46. http://www.sify.com/movies/vazhthukkal-review-tamil-pclw34hhajagd.html
 47. http://www.venpura.com/movie/Pori-2007
 48. http://www.indiaglitz.com/pallikoodam-tamil-movie-review-8325.html
 49. http://www.rediff.com/movies/2007/dec/07evan.htm
 50. http://www.rediff.com/movies/review/mayandi-kudumbathar-movie-review/20090608.htm
 51. http://www.imdb.com/title/tt2041424/
 52. http://www.indiaglitz.com/channels/tamil/article/51242.html
 53. http://www.sify.com/movies/uchithanai-muharnthal-review-tamil-14985992.html
 54. http://www.sify.com/movies/manivannan-s-50th-movie-nagaraja-cholan-ma-mla-news-tamil-mkkilLgfghd.html
 55. "கண்டுபிடி கண்டுபிடி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சீமான்".
 56. "பசி வந்தால் பணத்த சாப்பிடுவயா? கேள்வி கேட்கும் சீமான்: தவம் டிரைலர்!".
 57. "மிக மிக அவசரம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சீமான்".
 58. "சீமான் செய்தியாளர் சந்திப்பு".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமான்_(அரசியல்வாதி)&oldid=2844938" இருந்து மீள்விக்கப்பட்டது