சீயாத்தமங்கை வன்மீகநாதசுவாமி கோயில்
சீயாத்தமங்கை வன்மீகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நன்னிலம்-நாகூர் சாலையில் உள்ளது. திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோயிலில் வன்மீகநாதசுவாமியும் கால பைரவரும் உள்ளனர்.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவர் வன்மீகநாதர். இறைவி நீலோத்பலாம்பாள். இக்கோயிலில் கால பைரவர் சன்னதி கொண்டுள்ள இக்கோயிலை வன்மீகநாதசுவாமி மற்றும் மகா காலபைரவர் கோயில் என்றும் கூறுகின்றனர். இக்கோயிலின் மூன்று திருச்சுற்றுகளில் மூன்று கால பைரவர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.[1]
அமைப்பு
தொகுவிநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், நாகர், பிரம்மா உள்ளிட்டோர் இக்கோயிலில் உள்ளனர். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.[1]