சீவல மாற பாண்டியர்

சீவல மாற பாண்டியர் தொகு

தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னர்களுள் சீவல மாற பண்டியர் ஒருவர். இவர் பாண்டிய மரபினை சார்ந்தவர். இவருடைய தலைநகரமாக வீரவநல்லுர் என்ற இடம் அமைந்திருக்கிறது. இந்நகர் வீரைமாநகர் என்றும் வழங்கப்படும். நாடாளும் மன்னரான இவர் குடிமக்களின் அன்பு கொண்டு அரசாட்சி செய்ததுடன் அமையாது இராசை என அழைக்கப்பெரும் சங்கரநயினார் கோயில் என்ற திருத்தலதில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சங்கரநாராயண சுவாமி என்ற இறைவனிடமும் தணியாத அன்பு கொண்டு வாழ்ந்து வந்தார்.

நாட்டுப்பற்று,இறைப்பற்று இவற்றுடன் தீராத தமிழ்ப்பற்றும் கொண்டிருந்தார்.சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம் என்ற பக்திச்சுவை ததும்பும் நூலின் பிற்பகுதி ஏழு சருக்கங்களையும் இச்சீவல மாறப்பாண்டியர் பாடியுள்ளான் என்ற செய்தி இவர் தமிழ் புலமைக்கு சான்றாக அமைகிறது. இந்நூலின் முதல் ஆறு சருக்கங்களை பாடியவர் முத்துவீரக்கவிராயர். சருக்கங்களில் இப்புலவர் நாட்டு சிறப்பையும் நகரச்சிறப்பையும் இறைவனின் திருவுருவச்சிறப்பையும் எடுத்து மொழிந்துள்ளார். நாடு நகர வருணனைப் பகுதியுள் முத்துவீரக்கவிராயரின் கற்பனை வளத்தையும் அணி நலனையும் சொல்லாட்சித்திறனையும் கண்டு களிக்கலாம்.

இந்நூலின் பிந்திய ஏழு சருக்கங்களைப் பாடிய சீவலமாறப் பாண்டியர் இறைவனுடன் தொடர்புடய செய்திகளையும் புரான வரலாறுகளையும் கூறி மகிழ்கின்றார். இந்நூலின் பிற்பகுதியினை பாடிய சீவல மாறப் பாண்டியரின் காலம் கி.பி.பதிணெட்டாம் நூற்றாண்டு என்று அறிஞ்சர்களால் கருதப்பெறுகின்றது. நூலுள் இடம்பெறும் சாற்றுக் கவி சிறப்புப் பாயிரம் மூலம் சீவலமாறப்பாண்டியருக்கு காலத்தால் முற்பட்டவர் முத்துவீரக்கவிராயர் என்பது புலனாகின்றது. பண்டைய தமிழகத்தில் நாடாளும் தமிழ் மன்னர்கள் பலர் தமிழ் புலமையும் பெற்றிருந்தனர். அவ்வரிசையில் சீவல மாறப்பாண்டியரும் வைத்து எண்ணத்தக்கவராவார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. வாழ்வியற் களஞ்சியம்-தொகுதி பதினைந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவல_மாற_பாண்டியர்&oldid=3358732" இலிருந்து மீள்விக்கப்பட்டது