சுகாவா அணை

சப்பானின் நாரா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

சுகாவா அணை (Sugawa Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது.வளைவு வகை அணையாக 31.5 மீட்டர் உயரமும் 107 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக நீர் விநியோகத்திற்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 124.2 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 13 எக்டேர்களாகும். 797 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1959 ஆம் ஆண்டு தொடங்கி 1969 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

சுகாவா அணை
Sugawa Dam
அமைவிடம்நாரா மாநிலம், சப்பான்
கட்டத் தொடங்கியது1959
திறந்தது1969
அணையும் வழிகாலும்
உயரம்31.5 மீட்டர்
நீளம்107 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு797
நீர்ப்பிடிப்பு பகுதி124.2
மேற்பரப்பு பகுதி13 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sugawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. Miyawaki, Akira (1999). "Creative ecology restoration of native forests by native trees". Plant Biotechnology 16 (1): 15–25. பன்னாட்டுத் தர தொடர் எண்:1342-4580. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாவா_அணை&oldid=3504452" இலிருந்து மீள்விக்கப்பட்டது