சுகாயெவ் நீக்கல் வினை

(சுகேவ் நீக்கல்வினை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகாயெவ் நீக்கல் வினை (Chugaev elimination) என்பது ஆல்ககாலில் இருந்து தண்ணீர் மூலக்கூறை நீக்கி ஆல்க்கீன் தயாரிக்க உதவும் வேதி வினையாகும். இவ்வினையில் இடைநிலைச் சேர்மமாக சேந்தேட்டு உருவாகிறது. இலெவ் சுகாயெவ் என்ற உருசிய வேதியியலாளர் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

வினையின் முதலாவது படிநிலையில் அல்காக்சைடு மற்றும் கார்பன் இருசல்பைடில் (CS2) இருந்து பொட்டாசியம் சேந்தேட்டு , அயோடோமீத்தேனுடன் இணைந்து உருவாகிறது. பின்னர் இது சேந்தேட்டாக உருத்திரிகிறது.

200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மூலக்கூறிடை நீக்கல் வினையின் விளைவாக ஆல்க்கீன் உருவாகிறது. 6 உறுப்பு வளைய நிலைமாற்ற நிலையில் ஐதரசன் அணு β- கார்பன் அணுவில் இருந்து கந்தகத்திற்கு நகர்கிறது. பக்க உடன்விளைபொருள் மேலும் சிதைவடைந்து கார்பனைல் சல்பைடு ஆகவும் மீத்தேனெத்தியால் ஆகவும் மாறுகிறது.

மேற்கோள்கள் = தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாயெவ்_நீக்கல்_வினை&oldid=2747012" இலிருந்து மீள்விக்கப்பட்டது