சுக்காதியா விளையாட்டரங்கம்
சுக்காதியா விளையாட்டரங்கம் (Sukhadia Stadium) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் பில்வாரா நகரத்தில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 16000 பார்வையாளர்கள் அமர்ந்து இங்கு போட்டிகளை இரசிக்க முடியும். சிட்டி முனை மற்றும் விமானநிலைய முனை இரண்டும் விளையாட்டரங்கின் இரு புறங்களில் உள்ளன.
முழுமையான பெயர் | சுக்காதியா விளையாட்டரங்கம் |
---|---|
அமைவிடம் | பில்வாரா, இராசத்தான் |
இருக்கை எண்ணிக்கை | 16,000 |
கட்டுமானம் | |
Broke ground | 1995 |
திறக்கப்பட்டது | 1995 |
வலைத்தளம் | |
Cricinfo |
1964 ஆம் ஆண்டு மத்திய மண்டல துடுப்பாட்ட அணி மேற்கு மண்டல துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியபோது[1][2] இங்கு ரஞ்சிக் கோப்பை போட்டி நடைபெற்றது.[3]
1974 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை இங்கு தியோதர் கோப்பை ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் நடைபெற்றன.[4] இங்கு நடைபெற்ற முதல் தியோதர் கோப்பைப் போட்டியில் மத்திய மண்டல துடுப்பாட்ட அணி மேற்கு மண்டல துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது.[5] அப்போது முதல் இங்கு முதல் தரமல்லாத இதர துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.[6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Scorecard
- ↑ "UP claim first innings points". ESPN Cricinfo. 13 December 1999. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ First-class matches[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ List A matches
- ↑ Scorecard
- ↑ [1]
- ↑ Rajasthan score 89-run victory over MP
- ↑ 2 November 2000 Uttar Pradesh and Rajasthan settle for a draw