சுங்கை

சுங்கை (Sungkai) நகரம் மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம்.

சுங்கை (ஆங்கிலம்: Sungkai; மலாய்: Sungkai; சீனம்: 打扪) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது.[1]

சுங்கை
Sungkai
பேராக்
Map
ஆள்கூறுகள்: 4°00′N 101°19′E / 4.000°N 101.317°E / 4.000; 101.317
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்பத்தாங் பாடாங் மாவட்டம்
உருவாக்கம்1800
பரப்பளவு
 • மொத்தம்698 km2 (269 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்32,700
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்http://www.mdtapah.gov.my/

வடக்கே பீடோர் நகரம். தெற்கே துரோலாக், பீக்காம், சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். கிழக்கே சங்காட் ஜோங், தெலுக் இந்தான் நகரங்கள் உள்ளன. ஈப்போ மாநகரத்தில் இருந்து 69 கி.மீ.; பீடோர் நகரத்தில் இருந்து 11 கி.மீ.; தொலைவில் சுங்கை நகரம் அமைந்து உள்ளது.

வரலாறு

தொகு

இந்தப் பகுதியின் காட்டுக்குள் செசுங்கை (Sesungkai) எனும் மரங்கள் நிறைந்து உள்ளன. அந்த மரத்தின் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு சுங்கை எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று அறியப் படுகிறது. இந்த நகரம் 1800-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து உள்ளன.[2]

சுங்கை வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

தொகு
 • சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungkai)
  52 மாணவர்கள்: பெண்கள் 32; ஆண்கள் 20. ஆசிரியர்கள் 7.[3]
 • சுங்கை தமிழ்ப்பள்ளி (SJKT Sungkai)
  141 மாணவர்கள்: பெண்கள் 75; ஆண்கள் 66.
 • பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Bikam)
  22 மாணவர்கள்: பெண்கள் 16; ஆண்கள் 6.
 • சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungai Kruit)
  20 மாணவர்கள்: பெண்கள் 9; ஆண்கள் 11.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை&oldid=3995538" இலிருந்து மீள்விக்கப்பட்டது