சுசரு தேவி

மயூர்பஞ்சின் மகாராணி

மகாராணி சுசரு தேவி (அல்லது சுசர தேவி ) (9 அக்டோபர் 1874 - 14 திசம்பர் 1959) இந்தியாவின் மயூர்பஞ்சின் மகாராணி ஆவார். [1] மேலும் பெண்கள் உரிமை ஆர்வலராக அறியப்பட்டார்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கொல்கத்தாவின் பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதி கேசப் சந்திர சென்னின் மகளாக ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மயூர்பஞ்ச் மாநிலத்தின் மகாராஜா சிறீராம் சந்திர பஞ்ச் தேவ் என்பவரை (1871-1912) 1904இல் மணந்தார். இது மகாராஜாவின் முதல் மனைவி இறந்த பிறகு நடந்த இரண்டாவது திருமணம் ஆகும். [2] மகாராஜாவுடனான திருமணத்திலிருந்து, இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். இவர்களின் ஒரே மகன், மகாராஜ் குமார் துருவேந்திர பஞ்ச் தேவ் (1908-1945), இரண்டாம் உலகப் போரின்போது வீரமரணம் அடைந்த அரச கழக வான்படை விமானி ஆவார். [2] சுசரு தேவி தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மயூர்பஞ்ச் அரண்மனையில் கழித்தார். இது மயூர்பஞ்ச் மாநிலத்தின் ஆட்சியாளர்களின் அரச வசிப்பிடமாக இருந்தது.

இவரும் இவரது சகோதரியும் கூச் பெகரின் மகாராணியுமான சுனிதி தேவியும் நேர்த்தியான ஆடை அலங்காரத்திற்கு பெயர் பெற்றவர்கள். [3]

பணிகள் தொகு

இவரும் இவரது சகோதரி சுனிதி தேவியும் 1908இல் டார்ஜீலிங்கில் மகாராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை நிறுவினர். [4] மகாராணி சுசரு தேவி 1931இல் வங்காள பெண்கள் கல்வி அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1932இல் இவரது சகோதரி சுனிதி தேவியின் திடீர் மரணத்திற்குப் பிறகு, இவர் அனைத்து வங்காள பெண்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5] கொல்கத்தாவில் இவர் தனது சமகாலத்தவர்களான சாருலதா முகர்ஜி, சரோஜ் நளினி தத், டி. ஆர். நெல்லி தனது சகோதரி சுனிதி தேவி போன்றவர்களுடன் சேர்ந்து தேவதாசி முறையை ஒழித்தல், பால்வினைத் தொழில், பாலினத் தொழிலாகளின் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக போராடினர். [6]

இறப்பு தொகு

சுசரு தேவி 1959இல் இறந்தார்.[7]

சான்றுகள் தொகு

  1. Kaye, Joyoti Devi (1979). Sucharu Devi, Maharani of Mayurbhanj: a biography. https://books.google.com/books?id=JjQbAAAAMAAJ&q=born. 
  2. 2.0 2.1 "Mayurbhanj". Archived from the original on 2019-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
  3. The Many Worlds of Sarala Devi: A Diary: Translated from the Bengali Jeevaner Jharapata. The Many Worlds of Sarala Devi/The Tagores and Sartorial Styles By Sukhendu Ray, Malavika Karlekar, Bharati Ray. 2010. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788187358312. https://books.google.com/books?id=U2pDxinD28AC&q=suniti+devi++&pg=PA76. 
  4. The Indian Princes and Their States. https://books.google.com/books?id=Kz1-mtazYqEC&q=suniti+devi+cooch+behar&pg=PA144. 
  5. The women's movement and colonial politics in Bengal: the quest for political rights, education, and social reform legislation, 1921–1936. https://books.google.com/books?id=ckK3AAAAIAAJ&q=Sucharu+Devi,+Maharani+of+Mayurbhanj. 
  6. Pandita Ramabai Saraswati: her life and work. https://books.google.com/books?id=TD9IAQAAIAAJ&q=Sucharu+Devi. 
  7. Sengupta, Padmini Sathianadhan (1970). Pandita Ramabai Saraswati: her life and work. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780210226117. https://books.google.com/books?id=TD9IAQAAIAAJ&q=Sucharu+Devi. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசரு_தேவி&oldid=3554938" இலிருந்து மீள்விக்கப்பட்டது