சுசானே ஆர்டி டாட்டா

இந்தியாவில் முதலில் மோட்டார் கார் ஓட்டிய பெண்

சுசானே ஆர்டி டாட்டா (1880-1923), முன்பு சுசான் பிரையர் என்றும் சூனி ரத்தன்ஜி தாதாபோய் டாட்டா என்றும் அழைக்கப்பட்ட இவர், ஒரு பிரெஞ்சு பெண்ணான இவர் இந்திய தொழிலதிபர் இரத்தன்ஜி தாதாபோய் டாட்டாவின் மனைவியாவார். [1] 1905ஆம் ஆண்டில், இந்தியாவில் மோட்டார் கார் ஓட்டிய முதல் பெண்மணியாக அறியப்படுகிறார் [2]

சுசானே பிரையர்
பிறப்புபாரிஸ், பிரான்ஸ்
இறப்புஇலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரெஞ்சு
வாழ்க்கைத்
துணை
இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா
பிள்ளைகள்(ஜெ. ர. தா. டாட்டா உட்பட ஐந்து குழந்தைகள்)

இவர் பிரான்சின் பாரிஸ் நகரில் பிறந்தார். பிறப்பால் பிரெஞ்சுக்காரரான இவர் டாட்டா குழுமத்தின் தலைவரும் டாட்டா குடும்பத்தைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான இரத்தன்ஜி தாதாபாய் டாட்டாவை மணந்தார். அவர்கள் 1902இல் பாரிஸில் திருமணம் செய்து கொண்டனர். இவரது திருமணத்தின் போது, இவர் கிறித்துவ மதத்திலிருந்து சோராசுதிதிரர் சமயத்துக்கு மாறினார். மேலும், சூனி அல்லது சூனா என்று அழைக்கப்படத் தொடங்கினார். [3] தம்பதியருக்கு ரோடாபே, ஜஹாங்கீர், ஜிம்மி, சைல்லா, தோராப் ஆகிய ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஜேஆர்டி டாடா என்று அழைக்கப்படும் இவரது மகன் ஜஹாங்கீர், தனது தந்தையின் தொழிலை ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் இவரது மகள்களில் ஒருவரான சைல்லா, முகம்மது அலி ஜின்னாவின் மனைவி [ரத்தன்பாய் ஜின்னாவின் சகோதரர் தொழிலதிபர் சர் தின்ஷா மானெக்ஜி என்பவரை மணந்தார். சுசான் 1913 இல் தனது முதல் விமானத்தை ஓட்டத் தொடங்கினார். இவர் 1923இல் இறந்தார் [4]

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இவர் தனது பிரெஞ்சு மற்றும் இந்திய அடையாளங்களை சமரசம் செய்வதில் சில சிரமங்களை எதிர்கொண்டார். [5]

சான்றுகள்தொகு

  1. "Women of India". 17 September 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. First Women, 16 August 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2 September 2016 அன்று பார்க்கப்பட்டது
  3. "Tata Central Archives NewsLetter" (PDF). 12 May 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. Ian Magedera, [https://impact.ref.ac.uk/casestudies/CaseStudy.aspx?Id=7744 ‘From Bombay to Hardelot: the early history of Tata Group in France’, impact.ref.ac.uk, accessed 5 March 2021
  5. Ian H. Magedera, `Désorienter l'Orient et les orients désorientés: Said, Derrida et le paradoxe du GPS' in Jean-Pierre Dubost and Axel Gasquet (eds), Orients désorientés (Paris: Éditions Kimé, 2013), pp. 33-55, ISBN 978-2-84174-635-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசானே_ஆர்டி_டாட்டா&oldid=3351561" இருந்து மீள்விக்கப்பட்டது