சுசிலா ராணி படேல்

இந்திய பாரம்பரிய பாடகி

சுசிலா ராணி படேல் (1918–2014) இந்தியாவைச் சோ்ந்த இந்துஸ்தானி பாரம்பரிய இசைப் பாடகி, நடிகை, குரலிசைக் கலைஞர், மருத்துவர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் சிவ சங்கீதாஞ்சலி என்ற பாரம்பரிய இசைக்கான பள்ளியை நிறுவினார்.

சுசிலா ராணி படேல்
பிறப்பு1918
மும்பை, மகாராஷ்டிரா, பிரித்தானிய இந்தியா
இறப்பு2014 (அகவை 95–96)
தேசியம்இந்தியன்
பணிபாரம்பரிய இசைப் பாடகி
வாழ்க்கைத்
துணை
பாபுராவ் படேல்

வாழ்க்கை தொகு

1918 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவா் .[1] சுசிலா ராணி தனது தாயார் கமலா தேவி டோம்பாட்டிடம் இருந்து குரலிசையில் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். பின்னர், அவர் உஸ்தாத் அல்லாடியா கான், மொகுபாய் குர்திகல் மற்றும் அத்ரௌலி கரானாவின் சுந்திரபாய் ஜாதவ் ஆகியோரின் கீழ் இசை பயின்றார். சுசிரா ராணி பல தசாப்தங்களாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மதிப்புமிக்க விழாக்களில் பாடியுள்ளார். அவரது இசையை அகில இந்திய வானொலியும் தவறாமல் ஒளிபரப்பி வந்திருக்கின்றன. அர்ப்பணிப்புள்ள ஆசிரியரான இவர் ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளார், மேலும் மும்பையின் நேரு மையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலை பீடத்தில் இசை பற்றிய விரிவுரை மற்றும் செயல்விளக்கங்களை வழங்கியுள்ளார். 1989 ஆம் ஆண்டில், இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக அவர் ஒரு பொது அறக்கட்டளையை நிறுவினார்.ராணி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இசையை பரப்புவதில் பணியாற்றியதற்காக பல கலாச்சார நிறுவனங்களால் கௌரவிக்கப்பட்டார்.[2]

இசைத்தொழில் தொகு

சுசிலா ராணி படேல் 1942 ஆம் ஆண்டில் எச்.எம்.வி இசை நிறுவனத்துடன் பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், அவருக்கு பாபுராவ் படேல் உதவினார். [3] 1946 ஆம் ஆண்டு சுசிலா ராணி க்வாலன் மற்றும் திரௌபதியாஸ் ஆகிய இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் பாடகராகவும் நடித்தார் இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிக மோசமான விமா்சனங்களையே பெற்றன. அவற்றை பாபுராவ் படேல் தயாரித்தார், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

சுசிலா ராணி தனது இசை வாழ்க்கையைத் தொடர்ந்து, மொகுபாய் குர்திகர் போன்ற புகழ்பெற்ற பாரம்பரியப் பாடகர்களுடனும் பின்னர் சுந்தரபாய் ஜாதவுடனும் பயிற்சி பெற்றார். 1961 ஆம் ஆண்டில் சுசிலா ராணி மற்றும் அவரது கணவர் பாபுராவ் படேல் ஆகியோர் சிவசங்கீதாஞ்சலி என்ற பாரம்பரிய இசைக்கான பள்ளியை அமைத்தனர். [3] பாரம்பரிய இசையை ஊக்குவிப்பதற்கும் புதிய திறமைகளைக் கண்டறியவும் இது நிறுவப்பட்டது. அவரது மாணவர்களில் சிலர் பிரதீப் பரோட், ரோனு மஜும்தார், சதானந்த் நயம்பிலி, தனஸ்ரீ பண்டிட் ராய் மற்றும் நித்யானந்த் ஹல்திபூர் . சிவ சங்கீதாஞ்சலி பின்னர் சுசிலாராணி பாபுராவ் படேல் அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டது.

ராணியும் அவரது கணவரும் பிலிமிண்டியா என்ற திரைப்பட வணிகம் தொடர்பான பத்திரிகையை நடத்தினர், பின்னர் இது மிகவும் அரசியல் அன்னை இந்தியாவாக உருவானது. சுசிலா ராணி மற்றும் பாபுராவ் படேல் "யூதாஸ்" மற்றும் "ஹியாசந்த்" என்ற புனைப்பெயர்களில் எழுதினர். அவர்களின் விமர்சனப் பத்திகள் “பம்பாய் அழைப்பு” என்று அழைக்கப்பட்டது. [4] பத்திரிகையின் முழு உள்ளடக்கமும் கிட்டத்தட்ட அவர்களால் தயாரிக்கப்பட்டது. ராணி தனிப்பட்ட முறையில் திரைப்பட பிரமுகர்களுடன் நேர்காணல்களை நடத்துவார். அவர் இளம் வயதிலேயே நடிக்கத் தொடங்கிய நடிகை மதுபாலாவுடன் நெருக்கமாக இருந்தார், மேலும் அவருக்கு ஆங்கிலம் பேசவும் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார். [5]

பின் வரும் வருடங்கள் தொகு

பிற்காலத்தில், சுசிலா ராணி தனது வீட்டின் உரிமையைப் பற்றி தனது மறைந்த கணவரின் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சொத்து தகராறில் ஈடுபட்டார். [6] ராணி தனது 96 வயதில் 2014 இல் இறக்கும் வரை தனது பாரம்பரிய இசைப் பள்ளியை தொடர்ந்து நடத்தி வந்தார். [3]

விருதுகள் தொகு

சுசிலா ராணி மகாராஷ்டிர ராஜ்ய சமஸ்கிருத புராஸ்கர் விருதையும் 2002 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதெமி விருதையும் பெற்றார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-03-31.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-03-31.
  3. 3.0 3.1 3.2 3.3 "Classical singer Sushilarani Patel dies at 96". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  4. "Potato faces and pigeon chests". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  5. Madhubala: Her Real Life Story. https://books.google.com/books?id=dZgEDAAAQBAJ&pg=PT27. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Iconic 8,000-square-feet Pali Hill bungalow in property dispute". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிலா_ராணி_படேல்&oldid=3697738" இலிருந்து மீள்விக்கப்பட்டது