சுதந்திரன்

சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 - 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திரன்&oldid=1751848" இலிருந்து மீள்விக்கப்பட்டது