சுதந்திர பாரத கட்சி
சுதந்திர பாரத கட்சி (Swatantra Bharat Paksh) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். இது 1994 இல் சரத் அனந்த்ராவ் சோசி என்பவரால் நிறுவப்பட்டது. இக்கட்சியானது சி. ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரக் கட்சியின் வழித்தோன்றலாகும் .[2] இது 2004 மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வென்றது. ராசுரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வாமன்ராவ் சதாப் போட்டியிட்டார்.[3] இக்கட்சியானது மொத்தம் 7 வேட்பாளர்களை அறிவித்தது. கட்சியின் நிறுவனர் சரத் அனந்த்ராவ் சோசி 2004 முதல் 2010 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.[4]இந்தக் கட் சி பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணி வைத்தது.
சுதந்திர பாரத கட்சி | |
---|---|
தலைவர் | சரத் அனந்த்ராவ் சோசி, |
செயலாளர் | வாமன்ராவ் சதாப் |
ராஜ்யசபா தலைவர் | சரத் அனந்த்ராவ் சோச |
தொடக்கம் | 1994 |
முன்னர் | சரத் அனந்த்ராவ் சோச |
தலைமையகம் | A-4, Purnam Center Point, Opp. Gaikwad Class, Kahneri Wadi CBS, நாசிக் மாவட்டம் [1] |
மக்களவை | 0 / 543 |
ராஜ்யசபா | 0 / 245 |
இணையதளம் | |
swatantra |
மேற்கோள்கள்
தொகு- ↑ STATE ELECTION COMMISSION, MAHARASHTRA. 18 January 2012 (PDF) . Retrieved on 2012-10-26.
- ↑ ::Welcome to CCS:: பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம். Ccsindia.org. Retrieved on 2012-10-26.
- ↑ State Elections 2004 – Constituency wise detail for 154-Rajura Constituency of Maharashtra பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Member's Web Site பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம். 164.100.24.167:8080. Retrieved on 2012-10-26.