சுதின் தவாலிகர்

இந்திய அரசியல்வாதி

சுதின் மாதவ் தவாலிகர் (Sudin Dhavalikar) என்றும் சுதின் அல்லது 'ராமகிருஷ்ணா' தவாலிகர் என்றும் அழைக்கப்படுபவர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மார்கெய்ம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கோவா சட்டமன்றத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

சுதின் தவாலிகர்
சட்டமன்ற உறுப்பினர் கோவா
பதவியில் உள்ளார்
பதவியில்
1999
துணை முதலமைச்சர்-கோவா
பதவியில்
19 மார்ச் 2019 [1] – 27 மார்ச் 2019 [2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 நவம்பர் 1956 (1956-11-21) (அகவை 67)
பாண்டா, கோவா, போர்த்துகேய இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமகாராட்டிரவாதி கோமந்த கட்சி
துணைவர்ஜோதி தவாலிகர்
முன்னாள் கல்லூரிசெளகுலே கல்லூரி
வேலைஅரசியல்வாதி

அமைச்சர் தொகு

தவாலிகர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசுகளில் முக்கிய இலாகாக்களை வகித்து அமைச்சராக இருந்துள்ளார். இவர் பொதுப்பணித் துறை[3], போக்குவரத்து மற்றும் நதி வழிசெலுத்தல் ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.[4]

அரசியல் கட்சி தொகு

இவர் 1961-ல் போர்த்துகேய காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு கோவாவின் மகாராட்டிரவாதி கோமந்தக் கட்சியின் உறுப்பினர் ஆனார்.[5] கடந்த 20 ஆண்டுகளாகக் கட்சியில் பல சோதனைகளுக்குப் பிறகு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றினார்.

சர்ச்சை தொகு

தவாலிகர் கல்வித் தகுதி குறித்து தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பொய் கூறியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.[6] [7] [8] ஆனால் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த இந்த வழக்கை போண்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[9]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. "BJP's Pramod Sawant Takes Oath as Goa Chief Minister at 2am, Deputy CMs May Be Sworn in Today". News18. 19 March 2019.
  2. "Goa Deputy CM Sudin Dhavalikar dropped from Cabinet hours after MGP MLAs join BJP". 27 March 2019. https://www.indiatoday.in/india/story/goa-deputy-cm-sudin-dhavalikar-dropped-from-cabinet-hours-after-mgp-mlas-join-bjp-1487579-2019-03-27. பார்த்த நாள்: 20 September 2019. 
  3. "Goa Chief Minister Laxmikant Parsekar allocates portfolios to ministers". dnaindia.com. 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  4. "Goa Chief Minister Manohar Parrikar allots portfolios". 20 March 2017.
  5. "Sudin: Portugal should apologize to Goans". timesofindia.indiatimes.com/. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  6. "AAP files police complaint against Sudin Dhavalikar for lying on degree certificate before EC". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  7. "Goa: AAP releases documents, questions Sudin Dhavalikar's graduation claims". firstpost.com. 22 June 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  8. "AAP accuses Goa PWD Minister of having fake science degree". firstpost.com. 18 June 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  9. "Court dismissed case related to fake degree of Sudin Dhavalikar". goanews.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதின்_தவாலிகர்&oldid=3634640" இலிருந்து மீள்விக்கப்பட்டது