சுதிர் காகர்

இந்திய உளவியல் பகுப்பாய்வாளர், எழுத்தாளர்

சுதிர் காகர் (Sudhir Kakar, 25 யூலை 1938 – 22 ஏப்ரல் 2024) என்பவர் ஒரு உளவியல் பகுப்பாய்வாளர், எழுத்தாளர், புதின ஆசிரியர் என அறியப்படுபவர் ஆவார். பண்பாடு, கலாசாரம் சார்ந்த உளவியல், மதம் சார்ந்த உளவியல் ஆகியவற்றில் ஆய்வு செய்த அறிஞர் ஆவார். கதையல்லாத பொது நூல்கள் பலவும் கதைப் புத்தகங்கள் சிலவும் எழுதியுள்ளார். சிக்காகோ, ஆர்வர்டு, அவாய், மக்கில் மெல்போர்ன், பிரின்சுடன், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி ஆற்றியுள்ளார். சுதிர் காகர் தற்பொழுது கோவாவில் தம் மனைவி காதரீனாவுடன் வாழ்ந்து வருகிறார்.

சுதிர் காகர்
பிறப்பு(1938-07-25)25 சூலை 1938
நைனித்தால், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய உத்தராகண்டம், இந்தியா)
இறப்பு22 ஏப்ரல் 2024(2024-04-22) (அகவை 85)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மன்ஹெய்ம் பல்கலைக்கழகம்
பணிபுதின எழுத்தாளர்

இளமையும் கல்வியும்

தொகு

சுதிர் காகர் நைனிடாலில் பிறந்தார். எட்டு வயது வரை தில்லியில் மாதிரிப் பள்ளியிலும் 12 வயதில் சிம்லா பள்ளியிலும் பயின்றார். குஜராத்துப் பல்கலைக் கழகத்தில் எந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். செருமனி மேயின்கம் -வணிகப் பொருளியலில் முதுநிலை பட்டம் பெற்றார் (1960-1964). ஆத்திரியா வியன்னா ஆர்வர்டில் முனைவர் பட்டம் பெற்றார் (1965-1967). செருமனி பிராங்குபர்டில் உள்ள சிக்மண்ட் பிராய்டு நிறுவனத்தில் உளவியல் பகுப்பாய்வுப் பயிற்சியைப் பெற்றார் (1971-1975).

எந்திரப் பொருளியலும் வணிகப் பொருளியலும் பயின்று பட்டம் பெற்றாலும் அவர் மனம் உளவியலில் தான் ஈடுபட்டது. எனவே தம் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அயல்நாட்டில் சிறந்த பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மனோதத்துவம், மாந்தநூல், மெய்யறிவியல் ஆகியவற்றைப் பயில விரும்பி செருமனிக்குச் சென்றார். ஆமதாபாத்து ஐ ஐ எம் வேலையைத் துறந்து பிராங்குபர்ட்டுக்குப் போய் சிக்மண்டு பிராய்டு நிறுவனத்தில் உளவியல் பகுப்பாய்வுக் கல்வியில் பயிற்சிப் பெற்றார்.

பணிகள்

தொகு

சிக்மண்டு பிராய்டுக்குப் பின், சிறந்த உளவியல் அறிஞராக விளங்கிய எரிக் எரிக்சனை 1964இல் சந்தித்து நட்புக் கொண்டார். அவரை தம் வழிகாட்டியாகக் கொண்டு தானும் அவரைப்போல உளவியல் அறிஞராக விளங்க ஆசைப்பட்டார். இடைவிடாத ஆய்வுப் பணியினாலும் எழுத்துப் பணியினாலும் நோயாளிகளைச் சோதனை செய்வதாலும் இந்திய மக்களின் உளவியல் பாங்கையும் அடையாளத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. செருமனியில் வாழ்ந்தபோது இந்திய மெய்யறிவியல், இந்திய இசை, சமசுக்கிருத இலக்கியம் ஆகியவற்றைப் படித்தார் .

இந்து மத புராணங்கள், கதைகள் அவற்றின் வழிவந்த மக்களின் நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். காமம், ஆவல் என்பன எல்லா உயிரினங்களிடமும் உள்ளன; அவையே ஓர் உந்துதலாக இருந்து இயக்குகின்றன என்ற உண்மையை இந்துக் கடவுள்கள் பற்றிய கதைகளிலும் கலைகளிலும் காண முடிகிறது என்னும் கருத்தைத் தெளிவுப்படுத்தினார்.

ஆர்வர்டு, சிகாகோ, வியன்னா பல்கலைக் கழகங்களிலும் செருமனி பிராங்குபர்டில் உள்ள சிக்மண்டு பிராய்டு உளவியல் நிறுவனத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ரஜினி கோத்தாரி தொடங்கிய சி.எஸ்.டி.எஸ் என்னும் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

விண்வெளி ஆராய்ச்சி அறிஞர் விக்ரம் சாராபாய், நோபல் பரிசு அறிஞர் வி. சூ. நைப்பால், இந்து மத அராய்ச்சியாளர் வெண்டி டோனிகர், தத்துவ ஞானி ஜே. கிருட்டினமூர்த்தி, புபுள் ஜெயகர், இந்திரா காந்தி ஆகியோருடன் பழகும் வாய்ப்புகள் சுதிர் காகருக்குக் கிடைத்தது. இவற்றைப் பற்றி தன் வரலாற்று நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

விருதுகள்

தொகு

உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்கள் சுதிர் காகருக்கு இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கின.[சான்று தேவை]

எழுதிய நூல்கள்

தொகு
புனைவிலி புதினங்கள் (Non-fiction)
புனைவுப் புதினங்கள்
  • The Ascetic Of Desire
  • Indian Love Stories
  • Ecstasy
  • Mira And The Mahatma
  • The Crimson Throne

மேற்கோள்கள்

தொகு
  • Singh, Khushwant (25 April 2011), "Me and my couch: A review of A Book of Memory—Confessions and Reflections By Sudhir Kakar, Penguin/Viking, Pages: 318, Rs. 499", Outlook

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதிர்_காகர்&oldid=4052823" இலிருந்து மீள்விக்கப்பட்டது