சுந்தர சோழர் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்

சுந்தர சோழர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழப் பேரரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற சுந்தர சோழரை சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

சுந்தர சோழர்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
சுந்தர சோழர் இளைய பிராட்டி குந்தவை
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர்பொன்மாளிகையில் துஞ்சிய தேவர்,
தொழில்சோழப் பேரரசர்
குடும்பம் ஆதித்த கரிகாலன், இளைய பிராட்டி குந்தவை, அருள்மொழிவர்மன்
பிள்ளைகள் ஆதித்த கரிகாலன், இளைய பிராட்டி குந்தவை, அருள்மொழிவர்மன்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

பிறப்பும் வளர்ப்பும்

தொகு

அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர். சிறு பிராயத்துப் பிள்ளையாக இருக்கும் போதே ஈழத்துப் போரில் கலந்து கொண்டார். அவரைப் பற்றிய செய்திகள் தஞ்சைக்கு கிடைக்காமல் போனமையினால், கவலை அடைந்திருந்தனர். சுந்திர சோழரின் பெரிய தகப்பனார் இராசாதித்த தேவர் இரட்டை மண்டல படையை எதிர்த்து வீரமரணம் அடைந்தார். அரிஞ்சயத் தேவர் படுகாயமடைந்திருந்தார். அதனால் சோழப்பேரரசினை விருப்பமே இன்றி சிவபக்திமானான கண்டராதித்தர சோழர் நிர்வகித்தார்.

பராந்தக சோழருக்கு கண்டராதித்தரின் மனநிலை தெரிந்திருந்தது. அரசாங்க விசயங்களில் ஈடுபாடில்லாமல் எப்போதும் சிவபக்தியில் இருப்பவர் கண்டராதித்தர். அப்போது ஈழத்தில் சுந்தர சோழரை ஒரு தீவில் கண்டுபிடித்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள் வீரர்கள். இறக்கும் தருவாயில் இருந்த பராந்தக சோழர் சுந்திர சோழருக்கு இளவரசர் பட்டம் கட்டவேண்டுமெனவும், அவருடைய வாரிசுகளே சோழதேசத்தினை ஆள வேண்டுமெனவும் கண்டராதித்தரிடம் கூறிவிட்டு சிவபதம் அடைந்தார். கண்டராதித்தரும் அரசாங்க விசயங்களை வெறுத்தபடியால் ஒப்புக் கொண்டார். அரிஞ்சய சோழரிடமும், அவர் மகன் சுந்தர சோழரிடமும் அரசாங்க காரியங்களைக் கண்டராதித்த சோழர் ஒப்படைத்தார்.

இளம் காதல்

தொகு

சுந்தர சோழர் தன்னுடைய இளமைக்காலத்தில் ஒரு தீவில் ஊமைப் பெண்ணான மந்தாகினியை சந்தித்தார். அவர் மீது தீராத காதல் கொண்டார்.

மக்கள்

தொகு

சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், இளைய பிராட்டி குந்தவை, அருள்மொழிவர்மன் என்று மூன்று மக்கள் பிறந்தார்கள். அவர்களை பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி வளர்த்து வந்தார்.

திரைப்படம்

தொகு

மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திலூம், 2023 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் சுந்தரசோழர் கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். [1]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

ஆதாரங்கள்

தொகு