சுப்பிரமணிய தீட்சிதர்
சுப்பிரமணிய தீட்சிதர் என்பவர் பிரயோக விவேகம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்.[1] இந்நூலுக்கு உரையும் இவரே எழுதியுள்ளார். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார்திருநகரி (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர். சுப்பிரமணிய தீட்சிதர் இலக்கண விளக்கம் எழுதிய வைத்தியநாத தேசிகர் மற்றும் சாமிநாத தேசிகரின் சமகாலத்தவர் ஆவார்.[2]
சுப்பிரமணிய தீட்சிதர் | |
---|---|
பிறப்பு | ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | பிரயோக விவேகம் நூலை இயற்றியது |