சுய உதவிக் குழுக்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம மட்டத்தில் 10-20 ஆண்கள் அல்லது பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்களாகும். இந்தக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன்,பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது.இவை பொதுவாக இந்தியாவில் காணப்பட்டாலும் ஏனைய நாடுகளில் குறிப்பாக தென் ஆசியாவிலும் தென் கிழக்காசியாவிலும் காணபப்டுகிறது.
தமிழ்நாடு
தொகுஇது தமிழ்நாடு மாநில அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் திட்டம் ஆகும். பெண்களை 12 முதல் 20 நபர் வரை கொண்ட குழுவாக அரசு சார நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அமைத்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுகிறது. 31 .03 .2009 புள்ளி விவரப்படி 59 இலட்சம் மகளிர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களும் உண்டு.