சுருள் ஏடுகள்

சுருள் ஏடுகள் (scroll) பாபிரஸ் போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் என்று அழைக்கப்படுகிறது.[1]

பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட எகிப்திய மன்னர்கள பட்டியலின் சுருளேடு
சாக்கடல் சுருள் ஏடுகள்
ஐக்கிய இராச்சியத்தின் சட்ட நூல்களின் சுருளேடுகள்

புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1279 – கிமு 1213), பாபிரஸ் எனும் தடித்த காகிதத்தில், பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை துரின் மன்னர்கள் பட்டியல் என்பர்.[2]

கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்[3] எனும் யூதக் குழுவினர் விவிலியம் மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை பாபிரஸ் மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் அரமேயம் மற்றும் கிரேக்க மொழியில் எழுதி வைத்த சுருள் ஏடுகளை சாக்கடலின் வடமேற்கே உள்ள கும்ரான் குகைகளில் கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.[4][5][6][7]

பண்டைய எழுது பொருட்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Beal, Peter. (2008) "scroll" in A Dictionary of English Manuscript Terminology 1450–2000 Online edition. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2008. http://www.oxfordreference.com பரணிடப்பட்டது 2 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம் Retrieved 21 November 2013.
  2. Turin King List
  3. Essenes
  4. Dead Sea Scrolls
  5. Dead Sea Scrolls
  6. சாக்கடல் ரகசியம் - சுருள்கள் சொல்லும் பொருள் கண்டுபிடிப்பு
  7. 'Dead Sea Scrolls' at the Museum of the Bible are all forgeries

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Scrolls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_ஏடுகள்&oldid=3714819" இலிருந்து மீள்விக்கப்பட்டது