சுழலும் நேர்முனை எக்சு கதிர் குழாய்

சுழலும் நேர்முனை எக்சு-கதிர்க் குழாய் (Rotating anode x ray tube) என்பது எக்சு-கதிர்க் குழாயின் ஒரு வகை ஆகும். இதில் குழாயிலுள்ள நேர்முனை, நிலையாக இல்லாமல் சுழலும் வகையில் அமைந்துள்ளது. இலக்கில் தோன்றும் நிறைந்த அளவு வெப்பம் அதிகச் செறிவுடன் கூடிய கதிர்களைத் தொடர்ந்து பெற முடியாமல் செய்கிறது. அதிக வெப்பத்தால் இலக்கு உருகிவிடக்கூடும். தொடர்ந்து குழாயினைப் பயன்படுத்தும் போது உயரளவு வெப்பத்தினைத் தாங்கிக் கொள்ளும் விதத்தில் இந்த நேர்முனை உள்ளது. அதிகப் பரப்பில் நேர்முனையில் வெப்பம் தோற்றுவிக்கப்படுவதால் இலக்குச் சேதமுறாமல் காக்கப்படுகிறது. நேர்முனை நிமிடத்திற்கு 3600 முறை சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 60 சுழற்சி கொண்டுள்ளது.

எளிமைப் படுத்தப்பட்ட சுழலும் நேர்முனை எக்சு கதிர் குழாயின் திட்டமுறை
  • A: நேர்முனை
  • C: எதிர்முனை
  • T: நேர்முனை இலக்கு
  • W: X-கதிர் சாளரம்
சுழலும் நேர்முனை எக்சு கதிர் குழா

டங்ஸ்டனால் ஆன தட்டின் விட்டம் எலக்ட்ரான்கள் மோதும் பாதையின் பரப்பினை தீர்மானிக்கிறது. தட்டின் விட்டம் பொதுவாக 75 முதல் 100 மி.மீ. வரையிலும் காணப்படும். கோட்டுக் குவியக் கோட்பாடும் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் குவியப்பாதை பரபரப்பாக மாற வாய்ப்புண்டு. கவனக்குறைவால் குழாயில் ஏற்படும் பழுதுகள் இங்கும் ஏற்படலாம்.

ஆதாரம்

தொகு
  • Radio physics and dark room procedures-Jaypee Bros.Medical publishers

வெளி இணைப்புகள்

தொகு