சுவரொட்டி அமர்வு

சுவரொட்டி விளக்கக்காட்சி, என்பது மாநாடு அல்லது கருத்தரங்கில் கல்வி அல்லது தொழில்முறை சார்ந்த, ஆராய்ச்சி தகவல்களைச் சுவரொட்டி வடிவத்தில் வழங்குவதாகும். இதனை இம்மாநாட்டில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் பார்க்கக்கூடும். சுவரொட்டி அமர்வின்போது (poster session) கருத்தரங்கு கருதுபொருள் தொடர்புடைய சுவரொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். மருத்துவ மற்றும் பொறியியல் உள்ளிட்ட அறிவியல் மாநாடுகளில் சுவரொட்டி அமர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.[1][2][3]

ஒரு சுவரொட்டி அமர்வில் பங்கேற்க, ஆய்வுச்சுருக்கம் கருத்தரங்க அமைப்பாளருக்கு அனுப்பப்பட வேண்டும். சுருக்கம் பரிசீலிக்கப் பட்டு காட்சிக்கு வைக்க அழைக்கப்படுவர். சில சமயங்களில் ஆய்விதழில் வெளியீட்டிற்குத் தகுதியான சக மதிப்பாய்வு செய்யப்பட்ட உள்ளடக்கங்களும் இதில் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சுவரொட்டி சுருக்கங்கள் பின்னர் வாய்வழி விளக்கக்காட்சி அல்லது சுவரொட்டி விளக்கக்காட்சியில் வைப்பதற்குக் குறிப்பிட்ட வடிவில் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக மாநாட்டு நடைபெறும் இடத்தில் தனி மண்டபம் அல்லது பகுதியில் சுவரொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். சுவரொட்டியின் அருகில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் முறைகள் மற்றும் விளைவுகளைப் பார்வையாளர்களுக்கு விளக்குகிறார்கள். பார்வையாளர்கள் கேட்கும் சந்தேகத்திற்கும் ஆய்வாளர்கள் விளக்கமளிப்பார்கள். மாநாடு/கருத்தரங்க அட்டவணையில் சுவரொட்டி விளக்கக்காட்சிக்காக நிமிடங்களிலிருந்து மணித்துளி வரை நேரம் வழங்கப்படுகிறது. மிகப் பெரிய நிகழ்வுகளில் பல நாட்களில் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளும் விளக்கக்காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும்.[4]

விளக்கக்காட்சிகள் வழக்கமாக ஆராய்ச்சி சுவரொட்டியை ஒரு போர்ட்டபிள் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் அருகே இருக்கும் ஆராய்ச்சியாளர் சக ஆராய்ச்சியாளரால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர்.[3] சுவரொட்டி பலகைகள் பெரும்பாலும் 4x6 அடி அல்லது 4x8 அடி என்ற அளவில், ஒரு பலகையில் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுவரொட்டிகளை வைத்திருக்க மாநாட்டு அமைப்பாளர்கள் முடிவு செய்வதைப் பொறுத்து சுவரொட்டியின் அளவு மாறுபடும். சுவரொட்டிகள் பெரும்பாலும் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி நிரலைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. மேலும் அவை பெரிய வடிவமைப்பு அச்சுப்பொறியில் அச்சிடப்படலாம். பளபளப்பான காகிதம், மேட் காகிதம் (பளபளப்பு அல்லது மேட் லேமினேஷனுடன் இல்லாமல்), சாடின் காகிதம், வினைல் மற்றும் அச்சிடக்கூடிய துணி ஆகியவை சுவரொட்டி அச்சிட ஆதாரமாக உள்ளன. தற்பொழுது சுவரொட்டி அமர்வுகள் எண்ணிம முறையில் பெரிய திரைகளில் காண்பிக்கப்படுகின்றன. மேலும் இதில் உள்ள வசதிகளான காணொளிக்காட்சிகள், விவரித்தல் மற்றும் வெளிப்புற இணைப்புகள் உள்ளிட்ட அம்சங்களை இணைக்கவும் வழிவகை உண்டு.

எண்ணிம சுவரொட்டிகளின் தொகுப்புகளை போதுமான தெளிவுத்திறன் மற்றும் பிக்சல் அடர்த்தி கொண்ட மேசைக் கணினிகளிலும் வெற்றிகரமாகப் பார்க்க முடியும். நடப்பு மற்றும் கடந்தகால சுவரொட்டி அமர்வுகளின் எண்ணிம காப்பகங்களை உருவாக்க வழி வகுக்கின்றது.

எண்ணிம சுவரொட்டி அமர்வுகளின் அமைப்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைகளையும் அதற்கான தளவாடங்களை நிர்வகிப்பது பெரும் சவாலாக உள்ளது. பாரம்பரிய முறையில் அச்சிடப்பட்ட சுவரொட்டி அமர்வில், பங்கேற்பாளர்கள் ஆர்வத்தைப் பொறுத்து ஒவ்வொரு சுவரொட்டியிலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நேரத்தைச் செலவிடுவர். மேலும் சுவரொட்டிகள் தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் சக ஆய்வாளர்களுடன் உரையாடலாம். நேரக் கட்டுப்பாடு இல்லாமல் ஆராய்ச்சியைப் பற்றி விவாதிக்கவும் முடியும். எண்ணிம சுவரொட்டி அமர்வில் விளக்கக்காட்சிகள் வழக்கமாக நேரத்துடன், குறைந்த அளவு வெளிப்பாடுகளுடன், ஒரு குறிப்பிட்ட அட்டவணையைப் பின்பற்றிக் காண்பிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Writing@CSU, Colorado State University, Definition of a Poster Session.
  2. Department of Biology, George Mason University, A Guide to Writing in the Biological Sciences, The Poster Session. பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 Purrington, Colin (February 19, 2010). "Designing conference posters". Colin Purrington. பார்க்கப்பட்ட நாள் 2010-03-05.
  4. See, for example, the American College of Rheumatology Annual Meeting, November 2018, Annual Meeting Abstracts.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவரொட்டி_அமர்வு&oldid=3535898" இலிருந்து மீள்விக்கப்பட்டது