சுவலட்சுமி

இந்திய நடிகை

சுவலட்சுமி (பிறப்பு: ஆகத்து 19, 1977) என்பவர் கொல்கத்தாவை பிறப்பிடமாக கொண்ட வங்காள நடிகை ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஆசை (1995), கோகுலத்தில் சீதை (1996), நிலாவே வா (1998), நீ வருவாய் என (1999) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, வங்காள மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.[2][3][4]

சுவலட்சுமி
பிறப்புசுவலட்சுமி முன்ஷி
19 ஆகத்து 1977 (1977-08-19) (அகவை 47)
கொல்கத்தா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994-2003
பெற்றோர்கே. சி. முன்ஷி
இந்திராணி தேவி[1]

ஆரம்ப காலவாழ்க்கை

தொகு

இவர் 19 ஆகத்து 1977 இல் கொல்கத்தாவில் ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் கே. சி. முன்ஷி மற்றும் தயார் இந்திராணி தேவி ஆவார். 1998 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்துறை பட்டம் பெற்றார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

இவர் சிறுவயலிருந்து இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடன வடிவங்களில் ஆர்வமாக இருந்தார். ஒரு மேடை நிகழ்ச்சியில் இவரின் நடிப்புத்திறமையை பார்த்து வங்காள இயக்குனர் சத்யஜித் ராய் என்பவர் அவரது திரைப்படமான உட்டோரன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.[5] இந்த திரைப்படத்தை இவரது மகன் சந்திப் ராய் என்பவர் இயக்கியுள்ளார். மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை 1994 ஆம் ஆண்டில் வென்றது. இவ் திரைப்படம் கேன்ஸ் உட்பட உலகெங்கிலும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[6]

இவர் 1995 ஆம் ஆண்டில் காதல் திரில்லர் திரைப்படமான ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைபபடத்தை இயக்குனர் வஸந்த் என்பவர் இயக்க, மணி ரத்னம் மற்றும் எஸ். ஸ்ரீராம் என்பவர்கள் தயாரித்துள்ளார்கள். இவ் படத்தில் இவருக்கு ஜோடியாக அஜித் குமார் நடித்துளளார் மற்றும் இவ் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படம் என்ற விருதையும் வென்றுள்ளது. அதை தொடர்ந்து 1996 இல் அகத்தியன் இயக்கிய கோகுலத்தில் சீதை என்ற திரைபபடத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார் மற்றும் கே. பாலச்சந்தர் இயக்கிய கல்கி என்ற திரைபபடத்திலும் கௌரவ தோற்றம் அளித்தார்.

1997ஆம் ஆண்டு காத்திருந்த காதல் என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகவும், லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்திலும், காதல் பள்ளி என்ற நகைச்சுவை திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த லவ் டுடே என்ற திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1998 இல் இனியவளே என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுவுடன் ஜோடியாக நடித்தார். அநுராகக்கொட்டாரம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் நடிகர் திலீப்புக்கு ஜோடியாக அன்னா என்ற காதாபாத்திரம் மூலம் மலையாள திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[7][8][9] அதை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார், பார்த்திபன், தேவயானி நடிப்பில் உருவான

நீ வருவாய் என என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் 2000ஆம் ஆண்டில் பொட்டு அம்மன் என்ற பக்தி படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. வேணு தொட்டெம்புடி, ரோஜா செல்வமணி, கே. ஆர். விஜயா ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர் 2003ஆம் ஆண்டு நடித்த நதி கரையினிலே என்ற திரைப்படத்திற்க்காக தமிழ் நாடு தேசிய விருதுவென்றுள்ளார் இணைப்பது குறிப்பிடத்தக்கது. இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரைபபடத்துறையில் 1994 முதல் 2003 வரை முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

2008ஆம் ஆண்டில் சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ராஜா அணுகியுள்ளார் ஆனால் அந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை அவரின் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகை கௌசல்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[10]

தொலைக்காட்சி துறை

தொகு

இவர் 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் சூலம் என்ற பக்தி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்துளளார். இந்த தொடர் வாரநாட்களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சுவலட்சுமி 2001ஆம் ஆண்டில் விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு ஜெனீவா, சுவிட்சர்லாந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நாடுகளில் வாழ்ந்துள்ளார். திரைப்படத் துறையிலிருந்து விலகியதிலிருந்த சுவலட்சுமி பிரான்சிஸ்கோவில் உள்ள கலை பல்கலைக்கழக அகாடமியியில் 2013 ஆம் ஆண்டில் இல்லஸ்ட்ரேஷனில் முதுநிலை நுண்கலைகளில் பட்டம் பெற்றார்.[11]

தமிழ் மொழியில்

தொகு

மலையாள மொழியில்

தொகு
  • அநுராகக்கொட்டாரம்

வங்காள மொழியில்

தொகு
  • உட்டோரன்
  1. "Suvalakshmi Profile". Nilacharal.
  2. "Suvalakshmi's no to films". Indiaglitz. 24 August 2007. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
  3. Rangarajan, Malathi (28 November 2003). "Nadhi Karaiyinilae". தி இந்து. Archived from the original on 22 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Ashok Kumar, S. R (23 August 2002). "Tamil film in Chinese fest". தி இந்து. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. "Satyajit Rays son offers film tribute to his father". intoday.in. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  6. "UTTORAN - Festival de Cannes". Festival de Cannes. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  7. "Anuraagakkottaaram". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
  8. "Anuraagakkottaaram". malayalasangeetham.info. Archived from the original on 26 March 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
  9. "Anuraagakkottaaram". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
  10. "Suvalakshmi's no to films - Tamil Movie News - IndiaGlitz". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  11. "Bio". Suvaluxmi Banerjee. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவலட்சுமி&oldid=3738994" இலிருந்து மீள்விக்கப்பட்டது