சுவாயம்பு மனு

சுவாயம்பு மனு என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மன் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவருடைய மனைவி சதரூபை ஆவார்.

சிவதாட்சாயிணி குடும்பம்

சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளுக்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு மகன்களும், பிரசூதி, ஆகுதி என்ற இரு மகள்களும் பிறந்தனர்.[1] இவர்களில் பிரசூதிக்கு பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான தட்சனை மணம் செய்வித்தார்கள். ஆகுதிக்கு ருசி என்பவரை மணம் செய்விதிதார்கள்.

ருசி மற்றும் ஆகுதி தம்பதிகளுக்கு யக்கியன் என்ற மகனும், தட்சினை என்ற மகளும் பிறந்தார்கள். [2]

மனுவின் சமூகம் மற்றும் அரசியல் சட்டங்கள்

தொகு

மனு வகுத்த சமூகம் மற்றும் அரசியல், நிதிகள் தொடர்பான சட்டங்களே மனுஸ்மிருதி என்பர். இச்சாத்திரத்தில் உலகப்படைப்பு, நால்வகை வர்ணம்; நால்வகை ஆசிரமங்களான பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வனப் பிரஸ்தம் மற்றும் சந்நியாசம்; பொருளியலும் தனிமனித ஒழுக்கம்; கல்வியும் கடமைகளும், உணவு, தூய்மை மற்றும் மாதர் பற்றிய விதிகள்; அரச நீதி; நீதி நெறி சட்டங்கள்; ஆண் பெண்களின் அறம்; கலப்பு சாதிகள் - ஆபத்து தர்மம்; குற்றங்களின் கழுவாய் மற்றும் கர்ம வினைப் பயன்கள், முக்குணங்கள், முக்தி ஆகியவைகள் எடுத்துரைக்கிறது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://vaniquotes.org/wiki/Svayambhuva_Manu_begot_in_Satarupa_five_children_-_two_sons,_Priyavrata_and_Uttanapada,_and_three_daughters,_Akuti,_Devahuti_and_Prasuti
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=10876 விஷ்ணு புராணம் தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்

தொகு
  • Manusmriti:The Laws of Manu. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாயம்பு_மனு&oldid=2577374" இலிருந்து மீள்விக்கப்பட்டது