சுவெத்லேனா யிதோமிர்சுகாயா
சுவெத்லானா யாக்கொவ்லெவ்னா யித்தோமிர்சுகாயா (Svetlana Yakovlevna Jitomirskaya, பிறப்பு: யூன் 4, 1966) உக்ரைனிய கணிதவியலாளர் ஆவார். இவர் கணித இயற்பியலிலும் இயங்கியல் அமைப்புகளிலும் ஆய்வு செய்கிறார்.[1][2]
சுவெத்லானா யித்தொமிர்சுகயா Svetlana Jitomirskaya | |
---|---|
பிறப்பு | சூன் 4, 1966 கார்கீவ், உக்ரைன், சோவியத் ஒன்றியம் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | யாக்கோவ் சினாய் |
விருதுகள் | கணிதவியலில் ரூத் லிட்டில் பரிசு (2005) |
யித்தோமிர்சுகயா சோவியத் ஒன்றியம், உக்ரைன், கார்கீவ் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் இருவரும் கணிதவியல் பேராசிரியர்கள் ஆவர்.[1] சுவெத்லானா தனது முனைவர் பட்டத்தை மாசுக்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1991 ஆம் ஆண்டில் யாக்கோவ் சினாய் என்பவரின் மேற்பார்வையின் கீழ் பெற்றார்.[3] பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்), கணிதத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1994 இல் இணைப் பேராசிரியராகவும், 2000 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பதவியுயர்வு பெற்றார்.[2]
2005 இல் இவருக்கு அமெரிக்கக் கணிதக் கழகத்தின் ரூத் லிட்டில் சாட்லர் பரிசு வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 O'Connor, John J.; Robertson, Edmund F., "சுவெத்லேனா யிதோமிர்சுகாயா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- ↑ 2.0 2.1 Jitomirskaya's CV
- ↑ கணித மரபியல் திட்டத்தில் சுவெத்லேனா யிதோமிர்சுகாயா
- ↑ "2005 Satter Prize" (PDF), Notices of the American Mathematical Society, 52 (4): 447–448, April 2005.
வெளி இணைப்புகள்
தொகு- Home page of Svetlana Jitomirskaya
- Riddle, Larry (January 10, 2014), "Svetlana Jitomirskaya", Biographies of Women Mathematicians, Agnes Scott College, பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.</ref>