சு. வசந்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கல்வியியல் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். பொதுத்தொண்டில் ஈடுபாடுடையவர். ஒருங்கிணைந்த கல்வி, சிறப்புக் கல்வி, பெண் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். “நெருப்பில் பூத்த மலர்” எனும் நூலைப் படைத்துள்ளார். இவர் முனைவர் பி. இரத்தினசபாபதியுடன் சேர்ந்து எழுதிய “கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு )” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வசந்தி&oldid=3614097" இலிருந்து மீள்விக்கப்பட்டது