சூரஜ் மண்டல்

இந்திய அரசியல்வாதி

சூரச்சு மண்டல் (Suraj Mandal) பிறப்பு 21 சனவரி 1946) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 10வது மக்களவை உறுப்பினரும் ஆவார். மண்டல் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் சார்கண்டு முத்தி மோர்ச்சாவின் வேட்பாளராகப் பாரதிய சனதா கட்சித் தலைவர் சனார்தன் யாதவை தோற்கடித்து பீகாரில் உள்ள கோடாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டல் 1980 முதல் 1991 வரை பீகார் சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். [1]

சூரச்சு மண்டல்
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில்
1991–1996
முன்னையவர்சனார்த்தன் யாதவ்
பின்னவர்சகதாம்பி பிரசாத் யாதவ்
தொகுதிகோடா, சார்க்கண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சூரச்சு மண்டல்

21 சனவரி 1946 (1946-01-21) (அகவை 78)
தீவால் பாரி, Bari, சாந்தல் பர்கானா, பீகார்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
சார்க்கண்டு முத்தி மோர்ச்சா
சார்க்கண்டு விகாசு தளம்
துணைவர்சோபா தேவி
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
வாழிடம்(s)சீதாகட்டா, சாந்தல் பர்கானா, பீகார்
கல்விதில்லிப் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயம், இரயில்வே பணி

1993-ல் பி.வி.நரசிம்ம ராவ் பதவிக்காலத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக வாக்குக்குப் பணம் கொடுத்த சர்ச்சையில் மண்டல் பெயரிடப்பட்டது. இவர் சார்கண்டு முத்தி மோர்ச்சாவை விட்டு வெளியேறி சார்கண்டு விகாசு தளத்தை உருவாக்கினார்.[2][3][4]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "JMM-Soren expels Suraj Mandal". 7 January 2000. https://www.rediff.com/news/2000/jan/07jmm.htm. 
  2. Pioneer, The. "Ex-MP Suraj Mandal joins BJP". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  3. "Jharkhand: Former JMM MP Suraj Mandal joins BJP". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-16. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  4. "Former Jharkhand Mukti Morcha MP Suraj Mandal joins BJP". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்_மண்டல்&oldid=3585223" இலிருந்து மீள்விக்கப்பட்டது