சூரூ மாவட்டம்
சூரூ மாவட்டம் (Churu district) (இந்தி:चुरू जिला) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சூரூ ஆகும்.
சூரூ மாவட்டம் चूरु जिला | |
---|---|
சூரூமாவட்டத்தின் இடஅமைவு இராஜஸ்தான் | |
மாநிலம் | இராஜஸ்தான், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பிகானேர் |
தலைமையகம் | சூரூ |
பரப்பு | 13,835 km2 (5,342 sq mi) |
மக்கட்தொகை | 2,039,547 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 147/km2 (380/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 28.25% |
படிப்பறிவு | 66.75% |
வட்டங்கள் | 7 |
மக்களவைத்தொகுதிகள் | சூரு[1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 8 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-65 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில், தார் பாலைவனப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் பிகானேர் கோட்டத்தில் உள்ளது.
மாவட்டத் தலைமையிட நகரான சூரூவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டகத் திருவிழாவில் உலகப் புகழ் பெற்றது.
அமைவிடம்
தொகுஇராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் தார் பாலைவனத்தில், ஜங்களாதேஷ் பிரதேசத்தில் அமைந்த சூரூ மாவட்டத்தின் வடக்கில் அனுமான்காட் மாவட்டம், கிழக்கில் அரியானா மாநிலம், தென்கிழக்கில் சுன்சுனூ மாவட்டம் மற்றும் சீகர் மாவட்டம், மேற்கில் பிகானேர் மாவட்டம் மற்றும் நாகவுர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் சூரூ, ரத்தன்கர், தரண்நகர், ராய்கர், ரேணி, சர்தார்சாகர், சுஜன்கர் மற்றும் பிடாசர் என ஏழு வருவாய் வட்டங்களையும் சூரூ, தரண்நகர் மற்றும் சூஜன்கர் என மூன்று நகரங்களையும்; ராய்கர் மற்றும் சர்தார்சாகர் என இரண்டு ஊர்களையும் கொண்டது.
அரசியல்
தொகுசூரூ மக்களவைத் தொகுதியும்; சாதுல்பூர், தரண்நகர், சூரூ, ரத்தன்கர், நோகர், பத்ரா, சர்தார்சாகர் மற்றும் சுஜன்கர் என எட்டு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
தொகுஇம்மாவட்டத்தில் செம்பு மற்றும் ஜிப்சம் போன்ற கனிம வளங்கள் கிடைக்கிறது. மேலும் கம்பு, பருப்பு வகைகள் பயிரிடப்படுகிறது.
மக்கள் தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,039,547 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.75% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 28.25% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 6.01% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,051,446 ஆண்களும்; 988,101 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 13,835 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 147 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.75% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.78% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.04% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 317,813 ஆக உள்ளது. [2]
சமயம்
தொகுஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,777,879 (87.17 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 249,736 (12.24 %) ஆகவும்; சமண சமய , சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.
மொழிகள்
தொகுஇராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Parliamentary Constituencies of Rajasthan" (PDF). 2012. Archived from the original (PDF) on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
- ↑ Churu District : Census 2011 data
வெளி இணைப்புகள்
தொகு