சூல் முட்டை

கரு முட்டை (Ovum) அல்லது சூல் முட்டை என்பது பெண்ணின் இனப்பெருக்க உயிரணு ஆகும். இது ஆண், பெண் வேறுபாடுள்ள இனங்களில், பெண் உயிரினங்களில் இருக்கும் பால் உயிரணுவாக இருப்பதனால், பெண் பாலணு எனவும் அழைக்கப்படும். சூல் முட்டையானது ஆணின் பாலணுவுடன் இணைந்து கருவணு வை உருவாக்கும்.

மனித சூல் முட்டை

பாலூட்டிகள்

தொகு

மனித இனத்தில்

தொகு
 
சூல் முட்டையின் முதிர்ச்சிச் செயல்பாட்டில் நிறப்புரிகளின் எண்ணிக்கை குறைவதைக் காட்டும் படம்

மனிதரில் பெண்ணின் சூலகத்தில் இந்த சூல் முட்டைகள் உருவாகும். குழந்தைப் பிறப்பின்போதே ஒரு பெண்ணிற்கு வாழ்நாள் முழுமைக்குமான முட்டை மூலங்கள் (primordial follicles) உண்டாகின்றன; பெண் பூப்படைந்த காலத்திலிருந்து அனைத்து முட்டை மூலங்களும் தீரும் வரை மாதத்திற்கு ஒரு முட்டையாக முதிரவைத்து வெளியிடுகிறாள். இது முட்டைப் பிறப்பு எனப்படுகிறது.

பின்னர் இவை ஆணின் விந்தோடு சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் கருப்பையில் பதிந்து வளரும். கருவணுவானது முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து சூல்வித்தகம் மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் முதிர்கருவாகி, குறிப்பிட்ட கருத்தரிப்பு காலம் நிறைவடைந்ததும், குழந்தையாக பிறக்கும்.

மனித உடலில் உள்ள உயிரணுக்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை நுண்ணோக்கியின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஊர்வன, பறப்பனவினதை விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.[1][2][3][4]

பிற பாலூட்டிகள்

தொகு

பிற பாலூட்டிகளில் பாலிவினைச் சுழற்சி முற்றிலும் வேறுபட்டது; 'சூடாக' இருக்கும்போது மட்டுமே இவற்றின் பெண் இனங்களால் விந்துக்களை ஏற்றுக்கொள்ள இயலும். எனவே இந்தக் காலத்தில் மட்டுமே சூலகத்திலிருந்து முட்டை வெளிவருவது தூண்டப்படுகிறது; அடுத்த சில நாட்களுக்கு பால்வினை செயல்பாடு நிகழ்கிறது. பின்னர் அடுத்த 'சூடு' காலம் வரை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.

தாவரங்கள்

தொகு

பல தாவரங்களில் தாவர பெண் உறுப்புக்களில் ஒடுக்கற்பிரிவு மூலம் சூல் முட்டைகள் உருவாகின்றன. இந்த உறுப்புகள் முட்டை உயிரணுக்களை நீண்ட 'கழுத்து'ப் பகுதியில் கொண்டுள்ளன. முட்டை முதிர்வடையும்போது இந்தக் கழுத்து திறந்து கொள்ள விந்தணு நீந்தி கருக்கட்டலை நிகழ்த்துகிறது.

மலரும் தாவரங்களில் பெண் பாலணுக்கள் எட்டு உயிரணுக்களைக் கொண்டு சூல் வித்தில் உருவாகின்றன. இவை முளையப் பை எனப்படுகின்றன. முளையப்பையின் திறப்பிற்கு அண்மையிலுள்ள உயிரணு முட்டை அணுவாகிறது. மகரந்தச் சேர்க்கையின்போது விந்தணு முளையப் பைக்குள் நீந்தி முட்டையை கருக்கட்டுகிறது. உருவாகும் கருவணு பின்னர் முளையமாக சூல் வித்தில் வளர்கிறது.

படிமங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Ovum, Gray's Anatomy of the Human Body, Yahoo! Education". Archived from the original on 2009-07-25. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  2. Ovum, Online Medical Dictionary, CancerWEB, Newcastle University
  3. "Oogenesis, Dr. Uzwiak, New Jersey State University". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  4. Definition of Ovum, Biology-Online.org

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்_முட்டை&oldid=3555358" இலிருந்து மீள்விக்கப்பட்டது