செகாவதி பிரதேசம்

இராஜஸ்தானின் வரலாற்றுப் பிரதேசம்

அமைவிடம் வடக்கு இராஜஸ்தான் 27°55′N 75°24′E / 27.917°N 75.400°E / 27.917; 75.400
19ஆம் நூற்றாண்டு
செகாவதி சுதேச சமஸ்தானம்
இராச்சியம் நிறுவப்பட்ட ஆண்டு: 1445
மொழி செகாவாதி மொழி
அரச மரபு இராஜபுத்திர செகாவத் வம்சம் (1445-1948),ஜெய்ப்பூர் வம்சத்தின் கச்சவா கிளை
தலைநகரங்கள் அமர்சர், சாக்பூரா, சிகர், சின்சுனூ சிகார்
தனி இராச்சியங்கள்

செகாவதி பிரதேசம் (Shekhawati) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தை இராசபுத்திர குல செகாவத் வம்ச மன்னர்கள் 1445-ஆம் ஆண்டு முதல், 1947 இந்திய விடுதலை வரை ஆண்டனர்.[1] செகாவதி பிரதேசம் 13,784 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[2]

இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்த செகாவதி பிரதேசத்தில் சுன்சுனூ மாவட்டம் மற்றும் சீகர் மாவட்டங்கள் அமைந்துள்ளது.[3]

17-ஆம் நூற்றாண்டு முதல் 19-வது நூற்றாண்டு வரை மார்வாரி மக்கள் செகாவதி பிரதேசத்தில் அழகிய அவேலி கட்டிடங்களையும், படிக்கிணறுகளையும் நிறுவினர்.[4]

வரலாறு தொகு

பண்டைய வரலாறு தொகு

மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், செகாவதி பிரதேசத்தில் மத்சய நாடு இருந்ததாக குறித்துள்ளது.[5][6] மனுஸ்மிரிதி நூலில் செகாவதி பிரதேசத்தை பிரம்மரிஷி தேசம் எனக்குறித்துள்ளது.[7]

இராமாயணம் காவியத்தில் செகாவதி பிரதேசம், மருகந்தர் தேசத்தில் இருந்ததாக குறித்துள்ளது. கௌதம புத்தர் காலத்தில் இருந்த 16 மகாஜனபதங்களில், மத்சய நாடு மற்றும் அவந்தி நாடுகள் இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தது. செகாவதி பிரதேசம் அவந்தி நாட்டின் தாக்கம் அதிகம் இருந்தது.

செகவாத் வம்ச ஆட்சியில் தொகு

 
1515-ஆம் ஆண்டில் ராவ் பதே சிங் பதேப்பூரில் நிறுவிய படிக்கிணறு

செகாவதி பிரதேசத்தை இராஜபுத்திர குல செகாவத் வம்ச ஆட்சியாளர்கள் 1445 ஆண்டு முதல் இந்திய விடுதலை வரை ஆண்டனர்.[8][9]

 
செகாவதி ஓவிய வீடுகள்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. inbaisnews (2021-12-09). "Shekhawati region: History, geography, education, culture". Amazon Quiz (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  2. Taknet, D.K, Marwari Samaj Aur Brijmohan Birla, Indian Institute of Marwari Entrepreneurship, Jaipur, 1993 p 78 ISBN 81-85878-00-5
  3. inbaisnews (2021-12-09). "Shekhawati region: History, geography, education, culture". Inbais (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  4. Aditya Mukherjee, "Art through the lens: Havelis of Shekhawati", The Times of India (Nov 12, 2013)
  5. G H Ojha: Rajputane ka Itihasa (Part I), page 83
  6. Sukh Sampati Raj Bhandari: Bharat ke deshi Rajya, Jaypur Rajya ka Itihas, page 3
  7. Sahiram: Ek adhūrī krānti, Shekhawati kā kisān āndolan (1922-1952), page-3
  8. Hooja, Rima (2006). A History of Shekhawats. Rupa & Company. பக். 397. 
  9. inbaisnews (2021-12-09). "Shekhawati region: History, geography, education, culture". Inbais (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.

வெளி இணைப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Ranbir singh Shekhawat(DUNDLOD) History of Shekhawats,Jaipur,2001 ISBN 81-86782-74-5
  • Ghansyamdas Birla: Bikhare Vicharon ki Bharonti, New Delhi, 1978
  • Rajasthan: the painted walls of Shekhavati, by Aman Nath and Francis Wacziarg. Vikas Publications, 1982. ISBN 0-7069-2087-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செகாவதி_பிரதேசம்&oldid=3778627" இலிருந்து மீள்விக்கப்பட்டது