செக்காரக்குடி
செக்காரக்குடி, (Sekkarakkudi) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், செக்காரகுடி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் மேல செக்காரக்குடி , கீழ செக்காரக்குடி மற்றும் நடு செக்காரக்குடி எனும் மூன்று கிராமப் பகுதிகளைக் கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இக்கிராமத்தின் மக்கள்தொகை 6,352 ஆகும். இக்கிராமம் ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. செக்காரக்குடி கிராமம் ஒரு இராணுவ கிராமம் ஆகும்.
கிராமத்தின் சிறப்பு
தொகுதூத்துக்குடி நகரத்திலிருந்து 26 கிமீ தொலைவில் அமைந்த செக்காரக்குடி சிற்றூர் 5000 குடும்பங்கள் கொண்டது. செக்காரக்குடியின் 2000க்கும் மேற்பட்டோர் இராணுவம், துணை இராணுவப் படைகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இவ்வூரின் 3,000க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் படைவீரர்கள் ஆவார். [1]வேளாண்மை செழிக்காத, கரிசல் காட்டுப் பகுதியில் வாழும் இவ்வூர் இளைஞர்களுக்கு, இராணுவம் மற்றும் காவல் துறையில் சேர்வதற்கு தேவையான உடற்பயிற்சிகள் இவ்வூரிலேயே வழங்கப்படுகிறது.