செக் கொருனா

செக் கொருனா (செக் மொழி:koruna česká; சின்னம்: ; குறியீடு: CZK) செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஐ. ஒ) இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. (ஆனால் 2008ல் ஸ்லோவாக்கிய யூரோவுக்கு மாறிவிட்டது). ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன.

செக் கொருனா
koruna česká (செக் மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிCZK (எண்ணியல்: 203)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100ஹலேர்
குறியீடு
 ஹலேர்h
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)50, 100, 200, 500, 1000, 2000, 5000 Kč
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5, 10, 20, 50 Kč
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) செக் குடியரசு
வெளியீடு
நடுவண் வங்கிசெக் தேசிய வங்கி
 இணையதளம்www.cnb.cz
மதிப்பீடு
பணவீக்கம்2.4%
 ஆதாரம்Czech National Bank, அக்டோபர் 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_கொருனா&oldid=1356776" இலிருந்து மீள்விக்கப்பட்டது