செங்வூ சீய்

சீன இயற்பியலாளர்

செங்வூ சீய் (Xie Shengwu) சீன நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளராவார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 அன்று இவர் பிறந்தார். 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சாங்காய் இயியாவோ டோங்கு பல்கலைக்கழகத்தில் தலைவராகப் பணியாற்றினார். [1]

சீனாவின் கடற்கரை மாகாணமான செயியாங்கு மாகாணத்திலுள்ள சாவோசிங்கு நகரில் செங்வூ பிறந்தார். 1960 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை சாங்காய் இயியாவோ டோங்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியல் பாடத்தைப் படித்தார். 1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இவர் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே இயற்பியல் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். செங்வூ பின்னர் கற்பித்தல் உதவியாளராகவும் லேசர் ஆராய்ச்சி ஆய்வகத்தின் துணை இயக்குநராகவும் மாறினார். 1978 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை சாங்காய் இயியாவோ டோங்கு பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு இயற்பியல் துறையில் ஒளியியல் பாடம் பயின்று முதுநிலைப் பட்டம் பெற்றார்.

1981 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை செங்வூ இயற்பியல் பாடத்தின் முழுநேரப் பேராசிரியராக உயர்த்தப்பட்டு பின்னர் இயற்பியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1991 முதல் சாங்காய் இயியாவோ டோங்கு பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவராகவும், பல்கலைக்கழகத்தின் திட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டார். பட்டதாரி பள்ளியின் தலைவராகக் கற்பித்துக் கொண்டிருந்த இவர் 1994 ஆம் ஆண்டு முதல் முனைவர் பட்ட மாணவர்களின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார்.

1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை சாங்காய் இயியாவோ டோங்கு பல்கலைக்கழகத்திலேயே தலைவராகப் பணிபுரிந்த செங்வூ பணியிலிருந்து ஓய்வு பெற்றார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Chinese academics call for gov't support in research use". People's Daily. 17 July 2006. http://english.people.com.cn/200607/17/eng20060717_283786.html. 
  2. "New uni president". www.shanghai.gov.cn. 28 November 2006. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-12-17.
முன்னர்
வெங்கு சைலி
சாங்காய் இயியாவோ டோங்கு பல்கலைக்கழகத்தின் தலைவர்
1997 – 2006
பின்னர்
சாங்கு இயி (அறிவியலாளர்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்வூ_சீய்&oldid=3178670" இலிருந்து மீள்விக்கப்பட்டது