செஞ்சிறகு ஊசித்தும்பி

பூச்சி இனம்
செஞ்சிறகு ஊசித்தும்பி
செஞ்சிறகு ஊசித்தும்பி ஆண்
செஞ்சிறகு ஊசித்தும்பி பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Rhinocypha

Rambur, 1842

செஞ்சிறகு ஊசித்தும்பி (Rhinocypha bisignata) இது ஒரு பூச்சி வகையைச் சார்ந்த தும்பி இனம் ஆகும். பொதுவாக இவை ஊசித்தட்டான் வகையில் கொலொரோபைடியா (Chlorocyphidae) என்ற குடும்பத்தைச் சார்ந்ததாகும். இவ்வகையான தும்பிகள் இந்தியப்பகுதியில் காணப்படுகின்றன. [1][2]

விளக்கம்

தொகு

செஞ்சிறகு ஊசித்தும்பிகளின் கண்கள் கறுப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஆண் ஊசித்தும்பிகளின் நெஞ்சுப் பகுதியில் கறுப்பு நிறத்தில் இளமஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிற மெல்லிய பட்டைகளோடு காணப்படும். அதேபோல பெண் தும்பிகளின் நெஞ்சுப் பகுதியில் கறுப்பு நிறத்தில், இளமஞ்சள் பட்டைகளோடு தோற்றமளிக்கும். ஆண்தும்பிகளின் வயிற்றுப் பகுதியில் கறுப்பு மஞ்சள் புள்ளிகளோடு இருக்கும், பெண் தும்பிகளுக்கு அதே நிறங்களில் புள்ளிகள் காணப்பட்டாலும் அவை சற்று வெளிறிய நிறத்தில் இருக்கும்.

இவற்றின் கால்களில் மெல்லிய மயிர்க்கற்றைகள் தென்படும். தலையில் உடலோடு ஒட்டியபடி பின்புறம் உள்ள இறகுகள் ஊடுருவும் தன்மையுடன் அவற்றின் முனையில் சிவப்பு, கறுப்பு நிறத்திட்டு கலந்து காணப்படும். அதேபோல பெண் தும்பிகளின் இறகுகளின் முனையில் இளமஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறங்களில் தோற்றமளிக்கும். இந்த இறகு நிறத்தாலே, இவை செஞ்சிறகு உசித்தும்பி என்ற பெயரைப் பெற்றுள்ளன. [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சிறகு_ஊசித்தும்பி&oldid=3245920" இலிருந்து மீள்விக்கப்பட்டது